யு.எஸ்.: தற்கொலை செய்த நபரின் ஜீப் மோதி சென்னையைச் சேர்ந்த எஞ்சினியர் தம்பதி பலி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டபடி ஒருவர் ஓட்டிய ஜீப் மற்றொரு காரில் மோதி விபத்துள்ளானதில் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் தம்பதியும், அவர்களைப் பார்க்கச் சென்றிருந்த பெண்ணின் தாயாரும் பரிதாபமாக பலியானார்கள்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும், சென்னை மந்தைவெளியை சேர்ந்த சொப்னாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.
@abc15 pic.twitter.com/jcgA45WSlF
— Ammann Shaun (@AmmannShaun) June 8, 2015 மூர்த்தியும், சொப்னாவும் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் என்பதால் இருவரும் திருமணம் முடிந்தவுடன் அமெரிக்கா சென்றனர். அங்கு அரிசோனா மாநிலம், பீனிக்ஸ் சிட்டியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருவரும் பணி செய்து வந்தனர்.
அமெரிக்காவில் உள்ள சொப்னாவை பார்ப்பதற்காக, அவருடைய தாய் புவனேஸ்வரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார்.
கடந்த 7ம் தேதி புவனேஸ்வரி, மகள், மருமகன், ஆகிய 3 பேரும் பீனிக்ஸ் சிட்டியின் பக்கத்து நகரங்களுக்கு தங்களுடைய சொந்த காரில் சுற்றுலா சென்றனர்.
அந்த காரை மூர்த்தி ஓட்டினார். அந்தக் கார் செடோனா என்ற நகருக்கு அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே படுவேகமாக வந்த ஜீப் ஒன்று இவர்கள் 3 பேரும் பயணம் செய்த காரின் மீது பலமாக மோதியது. இந்த கொடுமையான விபத்தில் மூர்த்தியும், அவருடைய மாமியார் புவனேஸ்வரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களுமே அப்பளம் போல் நொறுங்கிவிட்டன.
இந்த விபத்தில், சொப்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக்குழுவினர், அவரை மீட்டு அரிசோனா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சொப்னா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 பேர் வந்த காரின் மீது மோதிய ஜீப்பை ஓட்டி வந்தவர் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய ஜீப் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து அரிசோனா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications