பேஸ்புக்கில் “லைவ் ஸ்டீரிமிங்” போட்டு அப்பாவி ஒருவரை சுட்டுத் தள்ளிய கேங்க்ஸ்டர்!
Subscribe to Oneindia Tamil
சிக்காகோ: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பேஸ்புக்கில் லைவாக வீடியோ போட்டு ஒருவரை சுட்டுத் தள்ளிய மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

31 வயதான பெயர் தெரியாத அம்மனிதர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் லைவ் ஸ்டீரிமிங்கில் அவரைச் சுட்டவர் ஒரு கேங்க்ஸ்டர் என அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிக்காகோவின் வெஸ்ட் எங்கிள்வுட் பகுதியில் நின்று கொண்டு, வீடியோ கேமராவைப் பார்த்து பேசும் அம்மனிதர் தடாலடியாக அருகில் இருக்கும் ஒருவரை காட்டுத்தனமாக சுட்டுத் தள்ளுகிறார். இதனையடுத்து அம்மனிதர் கீழே விழுகின்றார்.
உடனடியாக கீழே விழும் அவரின் சத்தமும், அவரைச் சுற்றிச் சுழலும் பொதுமக்களின் "மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்" என்னும் குரல்களும், அழுகை சத்தமும் கேட்பதாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications