நாக்கை வச்சி மூக்கை என்ன.. இவரு நெத்தியையே தொடுவாரு பாஸ்.. வைரலாகும் வீடியோ !
நாக்கால் நெற்றியைத் தொடும் மனிதரின் வீடியோ வைரலாகியுள்ளது.
காட்மாண்ட்: நேபாளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய நாக்கால் நெற்றியைத் தொடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தற்போதைய குழந்தைகள் மற்றும் முன்னாள் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் இந்த விளையாட்டை விளையாடாமல் இருந்திருக்க மாட்டார்கள். அது தான் நாக்கால் மூக்கைத் தொடுவது. எல்லோருக்கும் இது சாத்தியப் படுவதில்லை. சிலர் தங்கள் நாக்கால் அடுத்தவர் மூக்கைத் தொட்டு போங்கு ஆட்டம் கூட ஆடுவார்கள்.

ஆனால், நேபாளத்தில் வாழும் பகதூர் கதுவலுக்கு இது எல்லாம் ஜுஜுபி. 35 வயதான இவர், சர்வ சாதாரணமாக நாக்கால் மூக்கை மட்டுமல்ல, நெற்றியையே தொடுகிறார். உலகிலேயே முதல்முறையாக ஒருவர் நாக்கை வைத்து நெற்றியை தொடுவது இப்போது தான் எனக் கூறப்படுகிறது.
பள்ளி வாகன ஓட்டுநரான கதுவலைப் பார்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயமாம். காரணம் அவர் காட்டும் முகபாவனைகள் தான். இவருக்கு வாயில் ஒரே ஒரு பல் மட்டும் தான் உள்ளது. அதோடு இவரது நாக்கு மிக நீளமானதாக இருக்கிறது. உலகிலேயே நீளமான நாக்கு இவருடையது என்கிறார்கள்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் முதலில் என்னுடைய உதடுகளால் மூக்கை மூடி, அதன் பின் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடுவேன். ஒரு வேலை நான் பேய் போல் நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தால், நான் மேக் அப் எதுவும் போடத் தேவையில்லை, என்னை பார்த்தாலே மக்கள் பயந்து விடுவார்கள்" என்று நகைச்சுவையாகப் பேசுகிறார்.
கதுவல் நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications