For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பச்சை படுகொலை.. உலுக்கும் கொடூரம்.. "குரானை நான் எரிக்கல".. கதறியே இறந்த உயிர்.. இம்ரான்கான் ஆவேசம்

இளைஞரை கல்லால் அடித்து கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது

Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: மறுபடியும் ஒரு கொடுமை பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.. மன நலம் குன்றிய ஒருவரைக் கல்லாலேயே அடித்து கொன்றுள்ள சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை களங்கப்படுத்துவது பெரும் குற்றமாக கருதப்படுகிறது.. இதற்காக சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன? EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன?

பெரும்பாலும் மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. அதே நேரம், அந்த நாட்டு பழமைவாதிகளும், மக்களும் இந்த செயலில் ஈடுபடுபவர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன

குரான்

குரான்

இப்படித்தான், கடந்த டிசம்பர் மாதம் ஒரு சம்பவம் நடந்தது.. இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா... 40 வயது நபர்.. அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்தவர்.. இவர் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்துவிட்டதாக கூறப்பட்டது.. அந்த போஸ்டரில் குரானின் வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்ததாம்..

 அடித்து கொலை

அடித்து கொலை

இதனால், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பிரியந்தா குமாராவை சரமாரியாக தாக்கினர்.. அடித்ததுடன் விடவில்லை, ஆத்திரம் தீராமல் அவரை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து கட்டையாலேயே தாக்கி உள்ளனர்.. இதனால் பிரியந்தா குமாரா துடிதுடித்து மயங்கி விழுந்தார்.. கண்ணெதிரே அவர் சுருண்டு விழுவதை பார்த்தும்கூட அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீரவில்லை.. பிரியந்தா குமாராவை நடுரோட்டிற்கு இழுத்து வந்து, தீவைத்து உயிருடன் எரித்தும் கொன்றது.

 இம்ரான்கான்

இம்ரான்கான்

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரிக்- ஏ-லைப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டது.. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. இந்த சம்பவம் பாகிஸ்தானின் அவமானகரமான நாள் என்று காட்டமாகவே கூறியிருந்தார்.. இப்போதும் இதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது..

 மனநல பாதிப்பு

மனநல பாதிப்பு

பஞ்சாப் மாகாணத்தில் ஜங்கல் டேரா என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது.. 41 வயதாகிறது.. இவர் மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது.. குரான் நூலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து இவர் எரித்து விட்டதாக கூறி, அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக ஒன்று சேர்ந்துள்ளனர்.. அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்து, மொத்த பேரும் கல்லாலேயே தாக்கி உள்ளனர்.

 கல்லாலேயே தாக்கினர்

கல்லாலேயே தாக்கினர்

மக்கள் கல்லாலேயே அடிக்கும்போது, அகமது கதறினார்.. நான் குரானை எரிக்கவே இல்லை.. எரிக்கவே இல்லை, நான் நிரபராதி என்று துடிதுடித்து அழுது கொண்டே சொன்னார்.. ஆனால் யாருமே அவர் பேச்சை கேட்கவில்லை. இதில் அகமது அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்ல, அவரை படுகொலை செய்ததோடு, அவரின் சடலத்தையும் மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்..

 பச்சை படுகொலை

பச்சை படுகொலை

இந்த கும்பல் கல்லாலேயே அகமதுவை அடித்தபோது காவல்துறையை சேர்ந்த சிலர் அங்கு இருந்தபோதும், யாராலும் இத்ந கொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை.. இறுதியில் அங்கிருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.. ஆனாலும் அந்த கும்பல் விரைந்து வந்து, போலீசாரிடம் இருந்து அந்த நபரை விடுவித்து, இழுத்து சென்றுவிட்டதாம்.. இதை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். அகமதுவின் சடலத்தை மரத்தில் இருந்து கீழே இறக்க போலீசார் முயன்றுள்ளனர்.. அவர்களையும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்கி உள்ளது.

 இம்ரான்கான்

இம்ரான்கான்

இந்த பயங்கரமான சம்பவத்துக்கு பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்... சட்டத்தை பொதுமக்கள் கையில் எடுத்துக் கொள்வதை தன்னுடைய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ளார்... மேலும், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதுடன், இது குறித்து பஞ்சாப் காவல்துறை தலைவரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

English summary
Man stoned to death by mob in Pakistan and Imran Khan condemns
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X