விமானத்தில் தம்மடிக்க முயன்றவரின் கை, கால்களை கட்டிப்போட்ட சிப்பந்திகள்
மெல்போர்ன்: சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில் புகைப்பிடிக்க முயன்ற நபர் தனது இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த மாதியாஸ் ஜார்க்(54) என்பவர் புகைப்பிடிக்க அடிக்கடி முயன்றார். விமானத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறிய சிப்பந்திகளை தாக்க பாய்ந்தார்.

அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் அவரை இருக்கையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டனர் சிப்பந்திகள். விமானம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மாதியாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் பிரிஸ்பேனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாதியாஸ் தனது பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதி அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க மாதியாஸ் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் வரும் 10ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications