தூக்கக் கலக்கத்தில் சக பயணிகள் மேல் “சுச்சூ” போன வாலிபர்- அமெரிக்க விமானத்தில்!
நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆன்கரேஜ் நகரில் இருந்து ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகருக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் வாலிபர் ஒருவர் முன் சீட்டில் அமர்ந்திருந்த பயணிகள் மீது சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்கரேக் நகரில் இருந்து அந்த ஜெட்புளூ விமானம் புறப்பட்ட நேரத்தில் இருந்து தனது இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கிக்கொண்டே வந்த ஜெப் ருபின் என்பவர் தரையிறங்குவதற்கு சுமார் 30 நிமிடத்துக்கு முன்னர் தூக்கம் கலைந்து விழித்தார். தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று முன் இருக்கைகளுக்கு நடுவே உள்ள இடைவெளி வழியாக அவர் சிறுநீர் கழித்துள்ளார்.

முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடைகளும், கைப்பைகளும் ஈரம்பட்டு அசுத்தம் ஆன நிலையில், ஏதும் அறியாதவர்போல் ஜெப் ருபின் தனது இருக்கையில் மீண்டும் படுத்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட பயணிகள் அளித்த புகாரையடுத்து விரைந்துவந்த விமானப் பணியாளர்கள், போர்ட்லேண்ட்டில் விமானம் தரையிறங்கியவுடன் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்குப் பின்னர் சுமார் 5 மணிநேரம் போலீஸ் லாக்அப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜெப் ருபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications