சவுதியில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் கைது
சவுதி: சவுதியில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் கடந்த 12ம் தேதி 7 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த மாற்றாந்தாயின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அந்த நபர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
சவுதியில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பல நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பிளாக்கர் ஒருவருக்கு சவுதியில் அண்மையில் பொது இடத்தில் வைத்து கசையடி கொடுக்கப்பட்டது. இதற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications