சே குவேரா டீ-ஷர்ட் அணிந்தவர் அமெரிக்க ராணுவத்திலிருந்து நீக்கம்
அமெரிக்காவின் வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் கியூப புரட்சியாளர் சே குவேராவின் உருவப்படம் பொறித்த டீ-ஷர்ட் அணிந்திருந்த ராணுவ வீரர், அமெரிக்க ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்பென்சர் ரபோன் எனும் அந்த 26 வயது ராணுவ வீரர் முறையற்ற செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, திங்களன்று இந்த நடவடிக்கைக்கு உள்ளானார்.
நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் தனது பயிற்சியை முடித்ததும் கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததால், ராணுவம் அவர் மீது விசாரணையைத் தொடங்கியது.
அவர் மீண்டும் ராணுவத்தில் இணையவோ, முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகைகளைப் பெறவோ வாய்ப்பில்லாமல் போகலாம்.
தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் தான் செய்த செயலுக்கு வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், ஃபோர்ட் டிரம் ராணுவ குடியிருப்பின் முகப்பின் முன் நின்று, கையின் நடுவிரலை உயர்த்தும் ஆபாசமான சைகையை படமெடுத்து 'ஒன் ஃபைனல் சல்யூட்' (one final salute) என்று தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
- சே' குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்
- சே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்
மே 2016இல் வெஸ்ட் பாய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்தபின், 'கம்யூனிசம் வெற்றிபெறும்' (communism will win) என்று தனது தொப்பியில் எழுதி அதன் படத்தை அவர் வெளியிட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கியது.
இன்னொரு படத்தில் கியூபப் புரட்சியாளரான சே குவேராவின் படம் பொறித்த டீ-ஷர்ட்டை ஸ்பென்சர் அணிந்திருந்தார்.
செவ்வாயன்று விசாரணை முடிந்துள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அந்தரங்க உரிமை சட்டங்களின் கட்டுப்பாட்டால் மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
ஸ்பென்சர் ரபோன் தம்மை ஒரு 'புரட்சிகர சோசியலிசவாதி' எனக் கருதுவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடக்கவுள்ள 'சோசியலிசம் 2018' மாநாட்டில் அவர் உரையாற்றவுள்ளார்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
- காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு
- ஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்?
- 8 வழிச்சாலை: ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கே விவசாயிகள் கைது
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications