Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெறித்தனம்".. சாருக்கு உடம்பெல்லாம் மச்சம்.. ஒரே வீட்டில் 8 மனைவிகள்.. படுக்கை பகிர்வு இப்படிதானாம்

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் இளைஞர் வசித்து வருகிறார்

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: கல்யாணம் செய்து, இருக்கிற ஒரு மனைவியை சமாளிப்பதே பலருக்கு பெரும்பாடாக போய்விடுகிறது.. அதிலும் 2 மனைவிகள் என்றால் கண்டிப்பாக குடுமிப்பிடி சண்டைதான்.. ஆனால், இங்கே ஒருத்தர் 8 கல்யாணம் செய்து, ஒரே வீட்டில் "குடியும் கூத்துமாக" இருக்கிறார்..!

Recommended Video

    8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஜல்சா… சந்தோஷமாக வாழும் தாய்லாந்து ரோமியோ!

    அந்த கணவன் தாய்லாந்தில் வசிக்கிறார்.. பெயர் ஓங் டாங் சோரூட்.. இவர் ஒரு டாட்டூ கலைஞர்.. இவருக்குதான் 8 மனைவிகள் உள்ளனர்..

    8 பேரும் ஒரே வீட்டில் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.. காரணம், அத்தனை மனைவிகளும் சோரூட் தீவிரமாக காதலிக்கிறார்...!

     முதல் காதல்

    முதல் காதல்

    தன்னுடைய மனைவிகள் ஒவ்வொருவரை பற்றியும் சோரூட் சொல்லும்போதே பூரித்து போகிறார்.. அவர்களை எப்படி, எங்கே முதல்முதலாக சந்தித்தார், எப்படி காதலை சொன்னார், அந்த காதல் எப்படி ஒர்க் அவுட் ஆனது என்பது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.. முதல் மனைவி பெயர் நோங் ஸ்ப்ரைட்.. நண்பரின் கல்யாணத்தில் இவரை முதன்முதலில் சந்தித்தாராம்..

     ஆன் தி ஸ்பாட்

    ஆன் தி ஸ்பாட்

    "வேட்டையாடு விளையாடு" படத்தில் கமல் டக்கென காதலை சொல்வாரே, அதுமாதிரி அந்த கல்யாணத்திலேயே, அப்போதே ஆன் தி ஸ்பாட்டில் போய் லவ் சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.. அந்த பெண்ணும் ஓகே சொல்லவும், முதல் திருமணம் நல்லபடியாக முடிந்துள்ளது. இரண்டாவது மனைவி பெயர் நோங் எல்.. இவரிடம் காதலை சொல்லவே இல்லையாம்.. கண்ணாலேயே காதல் பார்வையை வீசினாராம்.. அந்த பார்வையிலேயே பெண்ணுக்கு காதல் வந்துவிட்டதாம்..

     8 பேருடன் ஒரே வீட்டில்

    8 பேருடன் ஒரே வீட்டில்

    முதல் மனைவியை பற்றி சொல்லவும், அதற்கு அந்த பெண் எந்த மறுப்பும் சொல்லவில்லை.. ஓகே சொல்லவும், 2வது திருமணமும் நல்லபடியாக முடிந்துள்ளது. மூன்றாவது மனைவியை ஒரு மருத்துவமனையில் சந்தித்துள்ளார்.. 4, 5, 6வது மனைவிகளை சோஷியல் மீடியாக்களிலேயே தேர்ந்தெடுத்துள்ளார்.. ஒருத்தர் இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. இன்னொருத்தர் ஃபேஸ்புக்கில், இன்னொருத்தர் டிக்டாக்கில்.. 3 பெண்களை இவைகளில் சந்தித்து, காதலை சொல்லி, முந்தைய திருமணங்களையும் வெளிப்படையாக கூறி, கல்யாணத்தை முடித்துள்ளார்..

     8 காதல்கள்

    8 காதல்கள்

    இந்த 6 மனைவிகளுடன் சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டினார் சோரூட்.. இதில் யாருடனும் தன்னுடைய நேரத்தை முழுமையாக செலவழிக்க முடியாதபடி தவித்துள்ளார். அப்போதுதான், ஒருநாள் தன் அம்மாவுடன் கோயிலுக்கு போகும்போது, நோங் பிலிம் என்ற பெண்ணைச் சந்தித்தார்... பார்த்ததும் காதல்.. கல்யாணம் செய்துக்க முடியுமா என்று ஓபனாகவே கேட்டுவிட்டாராம் சோரூட்.. இவர் அப்படி கேட்கவும் அந்த பெண்ணால் 'நோ' சொல்ல முடியவில்லையாம்... ஓகே தான் சொன்னாராம்.. அதன்படி 7வது மனைவியாக வந்து சேர்ந்தார் நோங் பிலிம்...

     8 மனைவிகள்

    8 மனைவிகள்

    இதனிடையே, ஒருநாள் லீவில் பீச்சுக்கு சென்றிருந்தாராம்.. அப்போது நோங் மாய் என்ற பெண்ணை சந்தித்தார்.. அவர்தான் இப்போது 8வது மனைவியாகி வாக்கப்பட்டு உள்ளார்.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், 8வது மனைவியிடம் காதலை சொன்னபோது, பெய்ரூட்டின் 4 மனைவிகளும் கூடவே ஒன்றாகவேதான் இருந்தார்களாம்.. இன்று 8 பேருமே ஒரே வீட்டிற்குள் ஜாலியாக இருக்கிறார்கள்.. 8 பேரும் கணவனை பற்றி சொல்லும் ஒரே வார்த்தை "ரொம்பவும் அக்கறையானவர்" என்பதுதானாம்..

     8 கல்யாணம்

    8 கல்யாணம்

    8 பேரிடமும் பிரிவினை இல்லை.. 8 பேரையும் நன்றாகவே நடத்துகிறார்.. இதுவரை எங்களுக்குள் சண்டைகள் வந்ததே கிடையாது" என்கிறார்கள். 8 கல்யாணம் ஆனதில், முதல் மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. இரண்டு மனைவிகளுக்கு இப்போதுதான் குழந்தைகள் பிறந்துள்ளதாம்.. ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்று தெரிந்தும், ஏன் நீங்கள் எல்லாம் ஒருவரையே திருமணம் செய்ய நினைத்தீர்கள் என்று இந்த பெண்களை கேட்டால், 'அவரது வெறித்தனமான காதல்தான் காரணம் என்கிறார்கள்...

     படுக்கை

    படுக்கை

    இப்போது மனைவிகள் ஆளுக்கு ஒரு பக்கம் வேலைக்கு போகிறார்கள்.. கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.. மாலை நேரம் வீட்டுக்கு வந்து ஜாலியாக இருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இரவு படுக்கையை எப்படி பகிர்ந்து கொள்வார்கள் என்று கேட்டால், திட்டமிட்டு பகிர்ந்து கொள்வார்களாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் சோரூட்டுடன் படுத்து கொள்வாராம்.. ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும்போது, மற்ற 7 மனைவிகளும் வேறு ஒரு ரூமில் படுத்துக்கொள்வார்களாம்... வாழ்வுதான் சோரூட்டுக்கு..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+