‘தி ரோஸ் டாட்டூ’ படத்தில் மர்லின் மன்றோ அணிந்திருந்த தோடு ரூ 1.11 கோடிக்கு ஏலம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் காதணி ரூ.1.11 கோடிக்கு விலை போனது.
தனது வசீகர அழகால் ஹாலிவுட் பட உலகை வசப்படுத்தியவர் நடிகை மர்லின் மன்றோ. ஹாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் கனவு கன்னியாக விளங்கிய மர்லின் மன்றோ, ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களையும் தனது வசீகர தோற்றத்தினால் ஈர்த்தவர். கடந்த 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மர்மமான முறையில் மர்லின் மன்றோ மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கான மர்மம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மர்லின் மன்றோ மறைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவரது மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த 52 ஆண்டுகளாக அவரது பெயர் ஏதோவகையில் பத்திரிகைகளில் இடம்பெற்று கொண்டுதான் இருக்கிறது.

ஹாலிவுட் பொருட்கள் ஏலம்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஹாலிவுட் பொருட்கள் ஏலம் விடப்பட்டது.

வெள்ளிக் காதணி...
இதில் மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் வெள்ளிக் காதணி ரூ.1.11 கோடிக்கு விலை போனது.

தி ரோஸ் டாட்டூ...
கடந்த 1955ம் ஆண்டு டென்னஸ்ஸீ வில்லியம்ஸ் படைப்பில் உருவான ‘தி ரோஸ் டாட்டூ' என்ற படத்தின் முதல் காட்சியில் இந்த காதணியை அணிந்து தோன்றுவார் மர்லின் மன்றோ.

மற்ற பொருட்கள்....
இது தவிர இந்த ஏலத்தில் ஹம்ப்ரி போகர்ட் பயன்படுத்திய லைட்டர் ரூ.11.55 லட்சத்திற்கும், பேவாட்ச் புகழ் நடிகரான டேவிட் ஹேசல்ஹாப் பயன்படுத்திய 1986-பான்டியாக் பைர்பேர்டு ரக கார் ஒன்று ரூ.91.83 லட்சத்திற்கும் விலை போனது.












Click it and Unblock the Notifications