"ஒரிஜினல்" மார்ல்பரோ நாயகன் மரணம்...!
லாஸ் ஏஞ்சலெஸ்: உலகின் பிரபலமான சிகரெட் விளம்பர நாயகனாகத் திகழ்ந்தவரான டேரல் வின்பீல்ட் தனது 85வது வயதில் மரணமடைந்தார்.
பிரபலமான மார்ல்பரோ சிகரெட் விளம்பரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் டேரல். இவரது கெளபாய் ஸ்டைல் மார்ல்பரே சிகரெட் விளம்பரம் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமானது.
மார்ல்பரோ சிகரெட் விளம்பரத்தில் பலர் நடித்திருந்தும் கூட டேரல்தான் அதில் மிகப் பிரபலமானவர். இதனால்தான் இவரை ஒரிஜினல் மார்ல்பரோ மேன் என்றும் செல்லமாக அழைப்பார்கள்.

ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர் போல உலகம் முழுவதும் பிரபலமானது இந்த மா்ர்ல்பரோ சிகரெட் விளம்பரம். இதன் விளம்பரத்தில் நடிப்போர் கெளபாய் வேடத்தில்தான் வருவார்கள். அதில் முதன்மையானவர் டேரல்.
செம ஸ்டைலிஷான லுக்குடன் கூடியவரான டேரல், நீல நிறக் கண்கள், அடர்த்தியான செம்மையான மீசையுடன் மார்ல்பரோ விளம்பரத்தில் தோன்றி அதை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். 20ம் நூற்றாண்டின் மிக வெற்றிகரமான விளம்பரமாகவும் மார்ல்பரோ விளம்பரம் மாற டேரலும் ஒரு முக்கியக் காரணம்.
இப்படிப்பட்ட பிரபலமான டேரல், அமெரிக்காவின் ரிவர்டன் நகரில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 85.
ஆண்களாலும் அதிகம் ரசிக்கப்படும் ஒரு ஆண் என்று இவரை 1975ம் ஆண்டு லாஸ் ஏஞ்செலஸ் டைம்ஸ் பத்திரிகை புகழ்ந்து எழுதியிருந்தது.
1929ம் ஆண்டு லிட்டில் கான்சாஸ் நகரில் பிறந்தவர் டேரல். இவருக்கு லென்னி ஸ்பிரிங் என்ற மனைவியும் 6 குழந்தைகளும், ஏராளமான பேரக் குழந்தைகளும், கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications