செவ்வாய் கிரகத்தில் 2000வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்தது நாசாவின் க்யூரியாசிட்டி!
நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாயில் தனது 2000வது நாளை நிறைவு செய்துள்ளது.
நியூயார்க்: நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தனது இரண்டாயிரவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்த க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை கடந்த 2012ம் ஆண்டு விண்ணில் அனுப்பியது. பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம், ஆகஸ்டு மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

அணு சக்தியில் இயங்கும் இந்த ஒரு டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும். 6 சக்கரங்கள் கொண்ட இந்தக் கலன் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தனது 2000வது நாளை நிறைவு செய்துள்ளது க்யூரியாசிட்டி. செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்கள் மற்றும் 35 விநாடிகளுக்குச் சமம் ஆகும். எனவே, இந்தக் கணக்கின்படி செவ்வாய் கிரகத்தில் க்யூரியாசிட்டி தரை இறங்கி 2,055 நாட்கள் ஆகின்றன.
கடந்த 2013ம் ஆண்டு க்யூரியாசிட்டி நடத்திய ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தின் மண்ணில் 2 சதவீதம் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குளோரின், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு இருப்பதும் க்யூரியாசிட்டி அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வந்தது நினைவு கூரத்தக்கது.
கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி செலவில் இந்த விண்கலத் திட்டத்தை நாஸா செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்கா தவிர 12 நாடுகளும் நிதியுதவி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications