ஒரு காலத்தில் செவ்வாயை நனைத்த வற்றாத ஜீவநதிகள்.. கூழாங்கல் சொல்லும் கதை
நாசா: ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் பெரிய பெரிய ஆறுகள் இருந்தது உண்மைதான் என்பதை தற்போதைய புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. ஆறுகளில் அடித்து வரப்பட்ட கூழாங்கற்கள் மிக நீண்ட தூரத்திற்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்பதால் நீண்ட நெடிய ஆறுகளை செவ்வாய் கிரகம் கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் அடித்துக் கூறுகிறார்கள்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கென பல்வேறு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அப்போது அது தான் இறங்கிய கேல் கிரேட்டர் பகுதியில் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் கூழாங்கல் இருந்தது தெரியவந்தது.

ஆய்வு...
இந்தக் கல்லானது நமது பூமியில் உள்ள ஆறுகளிலும், ஆற்றோரங்களிலும் காணப்படும் கற்களைப் போலவே உள்ளன என்பதால், இது குறித்தான ஆய்வு முடுக்கி விடப்பட்டது.

நீண்ட ஆறுகள்...
இந்நிலையில், சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின்படி செவ்வாயில் மிக நீண்ட நெடிய ஆறுகள் இருந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

தேங்கிய நிலையிலும்...
மேலும் அப்போது நீரால் அடித்து வரப்பட்ட கற்கள்தான் இந்த கியூரியாசிட்டி ரோவர் எடுத்த புகைப்படத்தில் இருப்பவை என்றும் தெரிய வந்துள்ளது. ஓடைகளாக மட்டுமல்லாமல் தேங்கிய நிலையிலும் இந்த ஆற்று நீர் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மர்மங்கள்...
தற்போது புதிய தகவலாக இந்த கற்கள் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்திலிருந்து அடித்து வரப்பட்டது என்று கண்டுபிடித்துள்ளனர். இது புதிய கருத்துக்களை கிளப்பியுள்ளது. இதன் மூலம் நாம் அறியாத செவ்வாய் கிரகத்தின் தரைப்பில் பல மர்மங்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

புதிய கணிதமுறை...
இந்தக் கல்லின் அளவையும், காலத்தையும் அறிய புதிய கணித முறையை விஞ்ஞானிகள் கடைப்பிடித்துள்ளனர். இது எப்படி உருண்டையாக மென்மையாக மாறியது என்று அந்த ஆய்வு நடந்து வருகிறது.

எப்படி உருண்டு வந்தது?
இந்த பாறைக் கல்லானது இந்த அளவுக்கு மென்மையாக வேண்டுமென்றால் அது எப்படிப்பட்ட நிலையில் உருண்டு வந்திருக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications