3 ஜொள்ளு வார்டன்கள்.... 3 அழகிகள்.. கவர்ச்சி டிரஸ்... 28 கைதிகள் கூண்டோடு எஸ்கேப்..!!
குயாபா, பிரேசில்: பிரேசிலின் குயாபா நகரில் உள்ள ஒரு சிறைச்சாலைக்குள் கவர்ச்சிகரமான உடையில் வந்த 3 பெண்கள், அங்கிருந்த காவலர்களை உடல் அழகைக் காட்டி மயங்க வைத்து பின்னர் மயக்க மருந்து கலந்த விஸ்கியைக் குடிக்க வைத்து, அதைப் பயன்படுத்தி அந்த சிறையில் இருந்த 28 கைதிகளையும் அங்கிருந்து தப்ப வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடம்பை ஒட்டிய மெல்லிய உடை மற்றும் போலீஸ் உடையில் இவர்கள் வந்துள்ளனர். சிறையில் காவல் பணியில் இருந்த 3 காவலர்களை அணுகிய அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் வர்றீங்களா என்று கேட்டு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதைப் பார்த்து ஜொள்ளு விட்ட காவலர்கள் அவர்கள் பின்னால் போயுள்ளனர். அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த விஸ்கியைக் கொடுத்த அழகிகள், காவலர்கள் மயங்கியதும் கை கால்களைக் கட்டிப் போட்டனர்.

பின்னர் அந்த காவலர்களை நிர்வாணப்படுத்தி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு சிறைக்குள் போய் அங்கிருந்த 28 பேரையும் தப்ப வைத்துள்ளனர். இதில் அந்த மூன்று பெண்களில் ஒருவரின் காதலரும் அடக்கமாம். தப்பி ஓடிய கைதிகளில் 8 பேரை போலீஸார் திரும்பப் பிடித்து விட்டனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
குயாபாவில் உள்ள நோவா முடம் சிறையில்தான் இந்த அக்கப் போர் நடந்துள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட சிறைக் காவலர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சிறையில் இருந்ததே 28 கைதிகள்தான். அனைவருமே தப்பி போகும்போது முன் வாசல் வழியாகவே போயுள்ளனர். போகும்போது காவலர்களின் துப்பாக்கி உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொண்டு சாவகாசமகா போயுள்ளனர். 12 காலிபர் துப்பாக்கிகள் 3, ஷார்ட் கன்கள், 2 38 காலிபர் ரிவால்வர்கள் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது.
சிறை உடைப்புக்குக் காரணமான அந்த மூன்று அழகிகளும் போகும்போது தங்களது உடையையும் கழற்றி அங்கேயே போட்டு விட்டுப் போயுள்ளனர்.
மூன்று பெண்களில் ஒருவரின் காதலரான கைதி ப்ரூனோ அமோரிம்தான் இந்த கடத்தல் திட்டத்தைப் போட்டுக் கொடுத்தவர் என்று கூற்பபடுகிறது. இந்த நபர் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் கைதானவராம்.
தற்போது கைதிகள் தப்பிப் போனதை விட மூன்று சிறைக் காவலர்களும் நிர்வாண கோலத்தில் கிடந்த கதையையும், அதுதொடர்பான புகைப்படமும்தான் பிரேசில் நாட்டில் படு காமெடியாகப் பேசப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications