Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிர்வாண திருமணம்.." அதுவும் ஒரே நேரத்தில் 29 ஜோடிகள்... நீங்கள் கனவிலும் யோசிக்க முடியாத வினோதம்!

Subscribe to Oneindia Tamil

கிங்ஸ்டன்: திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமானது. ஒவ்வொரு பகுதியிலும் கலாச்சாரப்படி சில சடங்குகள் மாறுபடும். ஆனால், இங்கு நீங்கள் கனவிலும் யோசிக்காத வகையில் ஒரு திருமணம் நடந்துள்ளது. அதாவது இதில் கணவன்- மனைவி ஆடையே இல்லாமல் நிர்வாணமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது மட்டுமின்றி விருந்தினர்களும் கூட நிர்வாணமாகவே திருமண நிகழ்வுக்கு வந்துள்ளனர்.

இந்த உலகில் பல வினோதமான நடைமுறைகள் குறித்து நாம் கேள்விப்பட்டு இருக்கலாம்.. ஆனால், இப்படியொரு வினோதமான சம்பவம் நிச்சயம் வேறு எங்கும் நடந்து இருக்காது.

jamaica world bizarre

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகெங்கும் கலாச்சாரங்கள், மரபுகள் மாறுபடும் என்றாலும் கூட திருமணம் என்பது நாடு முழுக்க பொதுவானதாக இருக்கிறது.

வினோத திருமணம்: ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கலாச்சாரப்படி, ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் திருமண சடங்குகள் மாறுபடும். ஆனால், இங்கு கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் வினோதமான முறையில் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பலர் திருமணம் செய்து கொண்டார்களாம்.. இதில் என்ன வினோதம்.. இது நம்ம ஊரிலேயே நடக்குமே எனக் கேட்கலாம்.. இதில் விஷயம் என்னவென்றால் அவர்கள் அனைவருமே ஆடைகளே அணியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 2000களில் தான் தான் இந்த வினோத சம்பவம் தொடங்கியிருக்கிறது. அங்கு ஜமைக்காவின் ரன்அவே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட்டில் தான் இது நடந்துள்ளது. தங்கள் ரிசார்ட்டிற்கு வரும் விருந்தினருக்கு அசாதாரண மற்றும் வினோதமான ஒரு அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். இதன் காரணமாகவே அந்த நிர்வாண திருமணத்தை நடத்தியுள்ளனர். முதலில் கடந்த 2001ம் ஆண்டு 8 ஜோடிகளுக்கு இதுபோல நிர்வாணமாகத் திருமணம் செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டில் அதிகபட்சமாக 29 ஜோடிகள் எந்தவொரு ஆடையும் அணியாமல் நிர்வாணமாகத் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த திருமண நிகழ்வை புளோரிடா யுனிவர்சல் லைஃப் தேவாலயத்தைச் சேர்ந்த ரெவரெண்ட் ஃபிராங்க் என்பவரால் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகும் கூட சில ஆண்டுகள் இதுபோல அங்கு நிர்வாண திருமணங்கள் நடந்துள்ளது.

இருப்பினும், 2003ல் நடந்த திருமணம் தான் இப்போதும் பேசுபொருளாக இருக்கிறது. ஏனென்றால் அப்போது அதிகபட்சமாக 29 ஜோடிகள் நிர்வாணமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ரஷ்யர்கள், அமெரிக்கர், கனடா நாட்டை சேர்ந்தவர் என பலரும் அந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான போட்டோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அப்போது அது உலகெங்கும் பேசுபொருள் ஆனது.

உள்ளூரிலும் கூட அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது ஒழுக்கக்கேடானது என்று பலரும் போராட்டத்தில் குதித்து இருந்தனர். இருப்பினும், அந்த ரிசார்ட் நிர்வாகம் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தனது விருந்தினர்களுக்காகவே இதைச் செய்வதாக ரிசார்ட் தரப்பில் கூறப்பட்டது. மேலும், கணவன்- மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இப்படி திருமணத்தை நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த முறையைப் பின்பற்றி, இப்போது வரை பல இடங்களில் இதுபோன்ற அசாதாரண திருமணம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+