கஜாவைவிட 5 மடங்கு வலிமையானது.. செந்நிறத்தில் துரத்தும் புழுதி புயல்.. ஆஸ்திரேலியாவில் பீதி!
ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் புழுதி புயல் காரணமாக அங்கு 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் புழுதி புயல் காரணமாக அங்கு 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம், மிகப்பெரிய புழுதிப்புயல் ஏற்பட்டது. அவர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய புழுதிப்புயல் அதுதான்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே வலிமை கொண்ட புழுதிப்புயல் அங்கே உருவாகி உள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
|
எப்படி இருக்கிறது
இந்த புயலின் நீளம் மட்டுமே 500 கிமீ, அகலம் 1000 கிமீ. இது சிட்னி, வேல்ஸ் , நியூ வேல்ஸ் ஆகிய பகுதிகளை கண்டிப்பாக தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பெர்ன் ஆகிய பகுதிகளும் இந்த புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
|
நிறம் எப்படி உள்ளது
இந்த புயல் செந்நிறத்தில் உள்ளது. புழுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த நிறத்தை உருவாக்கி உள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புயல் இப்போதே 180 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
|
பாதிப்பு என்ன ஏற்படுத்தும்
இந்த புயல் போக போக அதிக வேகத்தை ஏற்படுத்தும். இந்த புயலின் வேகம், கஜா புயலை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறலாம். இதனால் ஆஸ்திரேலியாவில் பெரிய கட்டிடங்கள் கூட பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
|
என்ன பாதுகாப்பு
இதற்காக தற்போது பெரிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 1 லட்சம் பேர் அங்கு வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இன்று மாலைக்குள் புயல் தாக்க வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications