30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்! எலிகள் கூட சீண்டவில்லையாம்! அம்மாடி
மெல்போர்ன்: மெக்டொனால்ட் நிறுவனத்தின் சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கரை இப்போது கண்டறிந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் கெட்டுப் போகவில்லையாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாஸ்ட் புஸ்ட் நிறுவனம் என்றால் அது மெக்டொனால்ட் தான்.. இந்த மெக்டொனால்ட் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பர்கர் தான். வெளிநாடுகளில் பலரும் இந்த பர்கரை தினசரி கூட சாப்பிடுவார்கள்.

இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டுப்போகாது.. மேலும், டேஸ்ட்டும் சூப்பராகவே இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால், இங்கே ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாகக் கெட்டுப்போகாமல் இருக்கிறதாம். மேலும், அது பார்க்க ஏதோ நேற்று செய்த பர்கரை போல பிரஷ்ஷாகவும் இருக்கிறதாம்.
பழைய பர்கர்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேசி டீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995ஆம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் சீஸ் உடன் கூடிய இந்த குவார்ட்டர் பவுண்டர் பர்கரை வாங்கியுள்ளனர். அப்போது பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். அதன் பிறகு ஜார்ஜ் புஷ், ஒபாமா தலா இரண்டு முறை, டிரம்ப், இப்போது ஜோ பைடன் ஒரு முறை என்று பல அதிபர்கள் வந்துவிட்ட நிலையில், இந்த பர்கருக்கு மட்டும் எதுவுமே ஆகவில்லையாம்.
இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், "அப்போது நாங்கள் இளைஞர்கள்.. நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டோம். இருப்பினும், அது அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது.. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஈலோசித்தோம். அப்படி நாங்கள் பேசும் போது இதை அப்படியே வைத்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம்.. அதைத் தான் செய்தோம்" என்கிறார்கள்.
30 ஆண்டுகள் ஆச்சு: சுமார் 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது அந்த பர்கரை அவர்கள் "McFossil" என்று அழைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. மேலும், கெட்டுப்போன வகையில் வாசம் கூட அதில் இருந்து வரவில்லை. இருப்பினும், முதலில் வாங்கப்பட்ட போது இருந்த சைஸ் உடன் ஒப்பிடுகையில் இதன் சைஸ் சற்று குறைந்துள்ளதாம்.
பர்கர்: இந்த பர்கரை இத்தனை ஆண்டுகள் சேமித்து வைக்க அவர்கள் ஸ்பெஷலாக எதையும் செய்யவில்லை. பெரும்பகுதி அந்த பர்கர் சாதாரண கப் போர்ட்டில் கண்டெய்னர் ஒன்றில் தான் வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பர்கருக்கு எதுவுமே ஆகவில்லையாம். சில சமயம் எலி அங்கிருந்த மற்ற பொருட்களை எல்லாம் சாப்பிட்டு இருக்கிறது. ஆனால் பர்கரை சாப்பிடவில்லையாம்.
பழமையான மெக்டொனால்டு பர்கர்: இது உலகின் மிகப் பழமையான மெக்டொனால்டு பர்கர் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல ஐஸ்லாந்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் பத்தாண்டுகள் பழமையான சீஸ் பர்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இரண்டு பர்கர் அதை விடப் பழையதாக இருக்கிறது. அதிலும் குளிர்சாதனப் பெட்டியில் கூட வைக்காமல் இந்த பர்கர் அப்படியே இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இதைப் பார்த்து பலரும் வியந்து போய் உள்ளார்கள். அதேநேரம் சிலர் இது பார்க்க நம்பும்படி இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications