வாயில் நறநற: மெக்டொனால்ட்ஸ் பர்கரில் கரப்பான்பூச்சியை பார்த்து அதிர்ந்த பெண்
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் பெண் ஒருவர் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வாங்கிய பர்கரில் கரப்பான்பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
நியூசிலாந்தைச் சேர்ந்தவர் ஆன்னா சோபியா ஸ்டீவன்சன்(26). மேக்கப் கலைஞர். அவர் கடந்த சனிக்கிழமை இரவு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பிக் மெக் மீல் என்ற உணவை வாங்கியுள்ளார்.

உணவை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று சாப்பிட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது குறித்து சோபியா கூறுகையில்,
நான் மெக்டொனால்ட்ஸ் பர்கரை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். பர்கரை சாப்பிடுகையில் ஏதோ வித்தியாசமான ஒன்று வாயில் பட்டது. நான் மாமிசம் என்று நினைத்து மென்றேன். அதன் பிறகு பார்த்தபோது தான் அது கரப்பான்பூச்சி என தெரிய வந்தது என்றார்.
இது குறித்து அவர் யாரிடமும் புகார் தெரிவிக்கவில்லை மாறாக புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். ஃபேஸ்புக்கில் சோபியா கூறியிருப்பதாவது,
கரப்பான்பூச்சி பர்கருக்காக நன்றி மெக்டொனால்ட்ஸ். பர்கரில் பாதி கரப்பானை பார்த்தேன். மீதியை நான் சாப்பிட்டுவிட்டேனோ? மெல்லும்போது தான் அதை வாயில் இருந்து எடுத்தேன். அருவெறுப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications