‘கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட்' க்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு தனது பெயரையும் மாற்றிக் கொண்ட இளைஞருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.
நமது கிராமங்களில் பச்சைக் குத்திக் கொள்ளும் என்ற பழக்கம் இருந்து வந்தது. அதுவேம் நாளடைவில் இன்று ‘டாட்டூஸ்' என நவீன சாயம் பூசிக் கொண்டு பேஷனாக வலம் வருகிறது.
ஆனால், உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்ட இங்கிலாந்து இளைஞர் ஒருவர் தனது பெயரையும் மாற்றிக் கொண்டதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.

உச்சி முதல்....
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரை சேர்ந்த மாத்யூ வீலன் என்ற இளைஞர், பச்சை குத்துவதில் அலாதி பிரியம் உடையவர். அதனால் 25 லட்சம் ரூபாய் செலவில் தனது முகம் உள்பட உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார் மாத்யூ.

கிங் ஆப் இங்க் கேண்ட்கிங் பாடி ஆர்ட்....
முகம் முழுவதும் பச்சைக் குத்தப் பட்டிருப்பதால இவரது முகமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளது. அதோடு மாத்யூ தனது பெயரையும் ‘கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட்' என மாற்றம் செய்து கொண்டார்.

சுற்றுப்பயணம்....
இந்நிலையில், உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் மாத்யூ. அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த போது தான் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.

பாஸ்போர்ட் மறுப்பு...
உண்மையான பெயரை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது பாஸ்போர்ட் அலுவலகம். ஆனால், மாத்யூ அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, அவருக்கு பாஸ் போர்ட்டு வழங்க அந்த அலுவலகம் மறுத்து விட்டது.

தொடர்ந்து போராடுவேன்...
ஓட்டுனர் உரிமத்தில் தற்போதைய பெயர்தான் உள்ளது. பெயரை மாற்றிக் கொள்வது எனது உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. தற்போதுள்ள பெயரிலேயே பாஸ்போர்ட் பெற போராடுவேன் என மாத்யூ வீலன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications