நாங்களும் நல்ல ஜோடிதான்... கொஞ்சம் கவனிங்கப்பா...

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 62 வயது பாட்டி 9 வயது சிறுவனை மணந்துகொண்டதுதான் நேற்றைய பரபரப்பு செய்தி. அதுவும் அந்தப் பாட்டியின் முன்னாள் கணவரின் முன்பாகவே இந்தத்திருமணம் நடைபெற்றுள்ளது.

நம் ஊரில் ஆணின் வயதை விட பெண்ணின் வயது குறைவாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத நியதி. ஆனால் இங்கோ தன்னை விட 53 வயது மூத்தப் பெண்ணை திருமணம் செய்துள்ளான் இந்தச்சிறுவன்.

தாத்தா வயது உடையவரை திருமணம் செய்து கொண்ட இளம் யுவதியும், பாட்டியை திருமணம் கொண்ட இளைஞரும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றி மேற்கொண்டு படியுங்களேன்.

பாட்டிகளை காதலிக்கும் 31 வயது இளைஞன்

பாட்டிகளை காதலிக்கும் 31 வயது இளைஞன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான கைல் ஜோன்ஸ் என்ற இளைஞன் ஒருவர் தன்னைவிட 60 வயது மூத்த 91 வயதான மூதாட்டி ஒருவரை காதலிக்கிறார். கைல் ஜோன்ஸ் தன்னை விட வயதில் மூத்த 60 வயதுக்கு மேற்பட்ட 5 பெண்களை தற்போது ஒரே நேரத்தில் காதல் செய்கிறாராம்.

எனக்கு திருப்திதான்

எனக்கு திருப்திதான்

இது குறித்து கைல் ஜோன்ஸ் கூறுகையில், 'ஒவ்வொருவரினது விருப்பமும் வெவ்வேறாக இருக்கும். எனக்கு வயது முதிர்ந்த பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளவே பிடிக்கும். அவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது திருப்பதியளிக்கிறது' என்கிறார்.

அம்மாவிடம் அறிமுகம்

அம்மாவிடம் அறிமுகம்

தான் காதல் செய்யும் பெண்களை அவ்வப்போது தனது தாய் செசிலியிமும் (51 வயது) அறிமுகம் செய்து வைக்கும் கைல் அண்மையில் தனது 91 வயது காதலியான மர்ஜோரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

புத்தகக்கடையில் பழக்கம்

புத்தகக்கடையில் பழக்கம்

மர்ஜோரியை முதல் முறையாக புத்தக கடையொன்றில் 2009ஆம் ஆண்டு சந்தித்தபோதே இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டதாம்.

18 வயதில் முதன்முறையாக

18 வயதில் முதன்முறையாக

கால்சென்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியம் கைல் தனது 18ஆவது வயதில் 50 வயதான பெண்ணொருவருடன் முதற் தடவையாக செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.

ஒன்லி டேட்டிங்தான்

ஒன்லி டேட்டிங்தான்

தொடர்ந்து டேடிங் இணையத்தளங்கள் மூலம் 60 முதல் 80 வயதான பெண்களுடன் உறவுகொள்ள ஆரம்பித்துள்ளார் கைல். ஆனால் கைல் எத்தனை மூதாட்டிகளைக் காதலித்தபோதிலும் இதுவரையில் எவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லையாம்.

113 வயது பெண்ணை மணந்த 70 வயது ஆண்

113 வயது பெண்ணை மணந்த 70 வயது ஆண்

113வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. மேற்கு ஸின்ஜியங் மாகாணத்திலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் அஸ்திஹன் சவுதி என்ற வயோதிப பெண் அம்தி அகமது என்ற தனது காதலரை பசு நகரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

முதல் பார்வையில் காதல்

முதல் பார்வையில் காதல்

கடந்த டிசம்பர் மாதம் சவுதியும் அகமதுவும் முதன் முதலாக சந்தித்தனர். இந்நிலையில் சவுதியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை அகமது முதலில் வெளியிட்டபோது சவுதி ஆரம்பத்தில் அதற்கு மறுப்புத்தெரிவித்திருந்தார்.

திருமணத்திற்கு மறுப்பு

திருமணத்திற்கு மறுப்பு

அகமதுவிடம் காதல் ஏற்பட்டிருந்த போதும் தனது அளவு கடந்த வயதை எண்ணி சங்கடப்பட்ட பாட்டி, அவரை திருமணம் செய்வதற்கு மறுத்துள்ளார்.

விடா முயற்சி

விடா முயற்சி

சவுதி திருமணத்திற்கு மறுப்புத்தெரிவித்தபோது அவரை இளைஞன் போன்று துரத்தி துரத்தி காதலித்துள்ளார் அகமது.

அகமது மனதைத் தளரவிடாது கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் சவுதியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கவே அவர் சம்மதித்துள்ளார்.

70ம் 21ம் ஜோடி சேர்ந்து பிரிந்த கதை

70ம் 21ம் ஜோடி சேர்ந்து பிரிந்த கதை

பிரிட்டன் நாட்டில் 70 வயதான ரின்க்லி ரோமியோ என்ற நபர் 21 வயது பெண்ணிடம் காதல் வயப்பட்டார். நண்பர்களும், உறவினர்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். திடீரென இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக ஒருநாள் அறிவித்துவிட்டனர்.

மன்மத தாத்தா

மன்மத தாத்தா

பிளேபாய் கிளுகிளு பத்திரிகையின் நிறுவனரான ஹக் ஹெப்னர், 87 வயதான இந்த தாத்தா நிஜ வாழ்க்கையிலும் குசும்புக்காரர்தான். இளம்பெண்கள் சூழ்ந்திருக்க, மன்மதராசாவாய் வலம் வருபவர். தற்போது 27 வயது யுவதியை கரம் பிடித்துள்ளார்.

ஒரே நாளில் 7 பெண்கள்

ஒரே நாளில் 7 பெண்கள்

ஒரே நேரத்தில் அதிக பட்சமாய் 7 பெண்களுடன் சுற்றித் திரிந்திருக்கும் ஹெப்னர் ஏற்கனவே `அதிகாரப்பூர்வமாய்' 2 முறை திருமணம் செய்து பிரிந்திருக்கிறார்.

கடைசித் திருமணமாம்

கடைசித் திருமணமாம்

அடுத்து கிரிஸ்டல் ஹாரிஸ் என்ற 27 வயது அழகு நங்கையைக் ரகசியமாய் கரம் பிடித்துள்ள இவர், `இதுதான் எனது கடைசித் திருமணம்' என்கிறார்.

மனைவி அனுமதியுடன்

மனைவி அனுமதியுடன்

`செக்ஸ் நல்லது தான். ஆனால் அதுவே வாழ்க்கையில் முக்கியமான விஷயமல்ல' என்றும் வேதம் ஓதும் ஹெப்னர், இனி தனது வருங்கால மனைவியின் அனுமதியில்லாமல் வேறு பெண்ணுடன் கூட மாட்டேன் என்றும் சொல்கிறார் இந்த தாத்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+