சரக்கு இல்ல… சைடு டிஷ் சாப்பிட்டாலே போதை ஏறுதாம்!...
லண்டன்: ஒரு சிலருக்கு மது குடித்தால்தான் போதை ஏறும். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபருக்கோ சைடு டிஷ் ஆன சிப்ஸ் என்னும் சைடுடிஸ் சாப்பிட்டாலே போதை ஏறுகிறதாம். அதற்கு காரணம் அவருக்கு ‘ஆட்டோ ப்ரூவரி சின்ட்ரோம்'தான் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஃபுல் அடிச்சும் போதை இல்லை என்று புலம்புபவர்கள் மத்தியில் எதுவும் குடிக்காமலேயே போதை ஏறுதே என்று புலம்புகிறார் நிக் ஹெஸ் என்ற அதிசய நபர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிக் ஹெஸ். திருமணம் ஆனவர். சில நாட்களாக அவருக்கு திடீர் என்று உடல் நலன் பாதிக்கப்பட்டது. அப்போது அவர் அதிக அளவு மது குடித்து, போதையில் இருப்பதுபோல காணப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் மது ஏதும் குடிக்கவில்லை என்றார். தொடர்ந்து இதே போன்ற நிலை ஏற்பட்டதால், தனது கணவர் தனக்கு தெரியாமல் மது குடிக்கிறாரோ என்று அவரது மனைவி சந்தேகப்பட்டார்.

கேமரா உடன்
எப்படியாவது இதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று நினைத்த நிக் மனைவி கேமராவும் கையுமாக அவரை சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால் அவர் மது எதுவும் குடிக்காமலேயே மயங்கி விழுவது தெரியவந்தது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்
இறுதியில் அவரது போதைக்கு காரணம், உருளைகிழங்கு சிப்ஸ் என்பது தெரியவந்தது. அவர் சாப்பிடும் உருளைகிழங்கு சிப்சில் உள்ள கார்போஹைடிரேட் அவரது வயிற்றில் சென்றவுடன் அதிக அளவு ஈட்சை உருவாக்குகிறது. பின்னர் அந்த ஈட்ஸ், மதுவாக மாறிவிடுகிறது. அதாவது அவரது வயிற்றில் மது தானாக உற்பத்தி ஆகிவிடுகிறது.

வினோத நோய்
பல சோதனைகளுக்கு பின் இந்த வினோத நோய் கண்டறியப்பட்டது. ‘ஆட்டோ புரூவரி சின்ட்ரோம்' என்ற நோய்தான் இதற்கு காரணம் என்பதை அறிந்த அவரது மனைவி அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.

மனைவிக்கு நன்றி
இப்போது அவர் உருளைகிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது இல்லையாம். சிகிச்சைக்குப் பின்னர் தற்போது பரவாயில்லை என்று கூறும் நிக், என் மனைவிக்குத்தான் இதற்கு நன்றி கூறவேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

பணம் மிஞ்சுமே!
சந்தேகப்பட்ட மனைவி கேமராவும் கையுமாக சுற்றியது அந்த நபருக்கு தெரியவில்லை பாவம். நம் ஊரிலும் இப்படி பார்த்தாலே போதை ஏறினா பணமாவது மிஞ்சுமே என்கின்றனர் நம் ஊர் குடிமகன்கள் சிலர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications