உலகின் பணக்கார பெண் 'வால்மார்ட்'டின் கிறிஸ்டி வால்டன்
நியூயார்க்: தனது கணவர் இறந்த பிறகு வால்மார்ட்டின் ஒரு பங்கு சொத்து கிடைத்த கிறிஸ்டி வால்டன் தான் உலகின் பணக்கார பெண் ஆவார்.
வெல்த் எக்ஸ் உலகின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, பசிபிக், லத்தீன் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய 7 பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு,

கிறிஸ்டி வால்டன்
வால்மார்ட் நிறுவனத்தை துவங்கிய சாம் வால்டனின் மகன் ஜான் டி. வால்டனின் மனைவி கிறிஸ்டி தான் உலகின் பணக்கார பெண் ஆவார். ஜான் இறந்த பிறகு அவருக்கு வால்மார்ட் நிறுவன பங்குகள் கிடைத்தன. அவரின் சொத்து மதிப்பு 37.9 பில்லியன் டாலர் ஆகும். வட அமெரிக்காவின் பணக்கார பெண்ணும் கிறிஸ்டி தான்.

லிலியன்
பிரான்ஸைச் சேர்ந்த அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான லாரியல் குடும்பத்து வாரிசான லிலியன் பெட்டன்கோர்ட் 31.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் இரண்டாவது பணக்கார பெண்ணாக உள்ளார். ஐரோப்பாவின் பணக்கார பெண் லிலியன்.

ஜினா
சுரங்க தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் ஜினா ரெய்ன்ஹார்ட் 14.8 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் மூன்றாவது பணக்கார பெண்ணாகவும், பசிபிக் பகுதியின் பணக்கார பெண்ணாகவும் உள்ளார்.

லத்தீன் அமெரிக்கா
தலா 6.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மெக்சிகோவைச் சேர்ந்த சகோதரிகள் வானஸா பவோலா ஸ்லிம் ஹஜ், மரியா சௌமாயா ஸ்லிம் டீ ரொமீரோ, ஜோஹன்னா ஸ்லிம் அயுப் ஆகியோர் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் 4வது இடத்திலும், லத்தீன் அமெரிக்காவின் பணக்கார பெண்களாகவும் உள்ளனர். அவர்கள் பெரும்பணக்கார தொழில் அதிபரான கார்லோஸ் ஸ்லிம்மின் மகள்கள் ஆவர்.

சீனா
6.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சீனாவைச் சேர்ந்த யங் ஹூயன் ஆசியாவின் பணக்கார பெண் ஆவார். 4.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் தொழில் அதிபர் ஷாரி அரிசன் மத்திய கிழக்கின் பணக்கார பெண் ஆவார். 1.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் நைஜீரிய தொழில் அதிபர் போலோருங்ஷோ அலாகிஜா ஆப்பிரிக்காவின் பணக்கார பெண்ணாக உள்ளார்.

வயதானவர்
92 வயதாகும் லிலியன் தான் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள வயதான பெண். சீனா ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான கன்ட்ரி கார்டன் குழுமத்தின் 70 சதவீத பங்குகளை தொழில் அதிபர் யங் கோகுயியாங் தனது மகள் 33 வயதாகும் யங் ஹூயனுக்கு அளித்தார். ஆக யங் ஹூயன் தான் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள இளம் பெண் ஆவார்.

சொத்து
உலக பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள 9 பேரின் மொத்த சொத்து மதிப்பு 114.6 பில்லியன் டாலர் ஆகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications