Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது.. இளவரசி கார் கதவை திறந்து அவரே மூடினாரா.. இங்கிலாந்தில் ஒரே பரபரப்பு

இளவரசி மேகன் கார் கதவை மூடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: எது எதுக்கு வாயை பொளக்கிறதுன்னு கிடையாதா? ஒரு இளவரசி அவர் கார் கதவை அவரே சாத்திக்கிட்டாராம். இதுதான் இங்கிலாந்து நாட்டின் தலைப்பு செய்தியாம்!!

ராஜ பரம்பரையில் எது செய்தாலும் அது செய்தியாக வந்துவிடும்போல. மகாராணி காலத்திலிருந்து, சார்லஸ்-டயானா தொடங்கி, ஹாரி-மேகன் மார்க்கல் வரை இது பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது.

 விரட்டி விரட்டி லவ்

விரட்டி விரட்டி லவ்

இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் என்ற அமெரிக்க நடிகையை விரட்டி விரட்டி லவ் பண்ணினார். ஒன்றரை வருடம் இந்த லவ் ஜோடிகள் பறந்து திரிந்தன. இறுதியில் திருமணமும் செய்து கொண்டார்கள். இப்போது நடிகை இளவரசி ஆகிவிட்டார். அதாவது டயானாவுக்கு மருமகளாகி விட்டார். அதனால் அவருக்கு தற்போது கிடைக்கும் செல்வாக்கும், மதிப்பும், மரியாதையும் சொல்லவே தேவையில்லை.

 கருப்பு நிற கார்

கருப்பு நிற கார்

சிறிது நாள் முன்பு, லண்டனில் ஒரு கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இளவரசி மேகன் ஒரு கருப்பு நிற காரில் வந்தார். கார் வந்து நின்றதுமே, அந்த இடத்தில் இளவரசிக்கு ஒரே வரவேற்பு மழைதான். காரை பார்த்ததும் ஒருவர் ஓடி வந்தார் வரவேற்பதற்காக!!

 கதவை சாத்தினார்

கதவை சாத்தினார்

காரிலிருந்து இளவரசி இறங்கினார். அப்போது அந்த நபர் காரை மூட சென்றார். ஆனால் அததற்குள் இளவரசியே கார் கதவை சாத்தி விட்டாராம். இதனால் கார் மூட வந்த அந்த நபர் "ஆ"வென வாயை பிளந்து நின்றுள்ளார். பொதுவாக பாதுகாப்பு காரணங்களுக்காக, அரச குடும்பத்தினர், கார் கதவை தாங்களே சாத்துவது இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.

 விவாத பொருள்

விவாத பொருள்

இந்த சம்பவம் பி.பி.சி., டெய்லி மெயில் உள்ளிட்ட எல்லா ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவே வந்துவிட்டது. இது போதாதென்று இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது எல்லாவற்றையும் விட இதை ஒரு விவாத பொருளாக வைத்துக் கொண்டு சிலர் விவாதிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

பழக்கதோஷம்

"வெல்டன் மேகன்" என்று அரண்மனை செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர் ஒருவர் கருத்து கூறியுள்ளார். "இளவரசி மேகன் எந்த மரபையும் மீறவில்லை. அவர் பழக்க தோஷத்தில்தான் கார் கதவை மூடி உள்ளார்" என்று இன்னொருவர் சொல்லி உள்ளார். இப்படி கார் கதவை இளவரசி சாத்திய விவகாரம் இன்னமும் போய்க் கொண்டே இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+