ரிஹானா கவுனில் ஆம்லெட் போட்டு.. சாரா தலையில் தீயை வைத்து.. நெட்டிசன்கள் அட்டகாசம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மெட் கேலா விருது நிகழ்ச்சிக்கு பாடகி ரிஹானா மற்றும் சாரா ஜெசிக்கா பார்க்கர் ஆகிய இருவரும் அணிந்து வந்த வித்தியாசமான உடைகளைப் பற்றி விதவிதமாக மீம்ஸ் தயாரித்து இணையத்தில் கலக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஹாலிவுட் என்றாலே அனைவரது மனதிலும் தோன்றுவது அவர்கள் உடுத்தும் கவர்ச்சியான ஆடைகள் தான். ஏனெனில் ஹாலிவுட் பிரபலங்கள் அனைவருமே எப்போதுமே செக்ஸியாக உடையணிந்து வந்து, மற்றவர்களை ஜொள்ளு மழையில் நனைய வைப்பார்கள்.

அதிலும், பிரபல பாடகி ரிஹானா பற்றி சொல்லவே வேண்டாம். இவரது குரல் மட்டும் அழகில்லை, அவரது உடலும் மிகவும் கச்சிதமாக இருக்கும். எனவே, விதவிதமான ஆடை அணிந்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது இவருக்கு கை வந்த கலை.

மஞ்சக் கலரு ஜிங்குச்சா...

மஞ்சக் கலரு ஜிங்குச்சா...

அந்தவகையில் சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட் கலா விருது விழாவிற்கு அவர் மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய கவுன் ஒன்றை அணிந்து வந்திருந்தார். அந்தக்காலத்து ராஜாக்கள் தங்கள் முதுகில் மிகப்பெரிய துணியைக் கட்டி இருப்பார்களே அதை அசப்பில் ஞாபகப் படுத்துகிறது அந்த கவுன்.

விதவிதமா போஸ்...

விதவிதமா போஸ்...

விழாவுக்கு தன் மஞ்சள் நிற நீள கவுனை இழுந்து வந்த ரிஹானா, போட்டோகிராபர்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாகப் பரவியது.

பீட்சா... ஆம்லெட்

வெறும் வாயுக்கு அவல் கிடைத்தால் கேட்கவா வேண்டும். அவ்வளவு தான் தங்களது திறமையை ரிஹானாவின் கவுனில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் நெட்டிசன்கள். ஒருவர் ரிஹானாவின் கவுனின் பின்புறம் வெங்காயம், சீஸ் எல்லாம் போட்டு பீட்சா ஆக்கியுள்ளார். மற்றொருவரோ அதை ஆம்லெட் ஆக்கியுள்ளார்.

மஞ்சள் நிற காண்டம்...

இதற்கெல்லாம் மேலே போய் குறும்பான ரசிகர் ஒருவர், ரிஹானாவின் ஆடை ‘மஞ்சள் நிற காண்டம்' போன்று இருப்பதாக வர்ணித்துள்ளார். ரிஹானா போட்டோவின் அருகிலேயே காண்டத்தின் புகைப்படம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.

எட்டிப் பார்க்கும் ஏலியன்...

இன்னொரு அன்பரோ, போட்டோஷாப் உதவியால் ரிஹானாவின் கவுனில் நான்கைந்து அனிமேஷன் கதாபாத்திரங்கள் ஏறி நிற்பது போல் வடிவமைத்துள்ளார். மற்றொரு டிவிட்டில் ரிஹானாவின் கவுனில் ஏலியன் ஒருவர் எட்டிப் பார்க்கிறார்.

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...

ரிஹானா மஞ்சள் நிற கவுனைப் போலவே சாரா ஜெசிக்கா பார்கரின் வித்தியாசமான ஹேர்ஸ்டைலையும் மீம்ஸ் தயாரித்து கிண்டல் செய்துள்ளனர். அந்த ஹேர்ஸ்டைல் தலையில் தீப்பிடித்த எபெக்டைத் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+