திருமணம் செய்யப் போகும் பெண் குளிப்பதை ஒளிந்து நின்று பார்க்கலாம்... சர்ச்சை "ஃபத்வா"!
கெய்ரோ: எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு மதத் தலைவர் அறிவித்துள்ள வித்தியாசமான ஃபத்வா அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒருவருக்கு வருங்காலத்தில் மனைவியாகப் போகும் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது அதை மறைந்து நின்று ரசித்துப் பார்ப்பது தவறில்லை என்று இந்த ஃபத்வா அதாவது மத நெறிமுறை கூறுகிறது.
இதுதொடர்பாக சலாபி பிரிவைச் சேர்ந்த மதபோதகர் உசாமா அல் குவைசி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வீடியோ மூலம் அவர் விடுத்துள்ள உரையில், எதிர்காலத்தில் தான் மணம் புரியவுள்ள பெண், குளித்துக் கொண்டிருக்கும்போது அவரை மறைந்திருந்து பார்ப்பது குற்றச் செயலாகாது.
உண்மையான மனதுடன், அந்தப் பெண்ணை நிச்சயம் மணப்பேன் என்ற உறுதியுடன் இருந்தால், இதை செய்யலாம். அதில் தவறில்லை. ஆனால் நோக்கம் சுத்தமானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இதை எகிப்து மதப் பிரிவு அமைச்சர் முகம்மது முக்தார் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதை ரசித்துப் பார்ப்பது அந்தப் பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல், அந்த ஆணுக்கும் கூட அது மதிப்புக்குரியதாக அமையாது. எனவே இந்த ஃபத்வாவை ஏற்க முடியாது.
இதுபோல அவரது மகளுக்கு நடந்தால் அதை இந்த மதகுரு அனுமதிப்பாரா. அவருக்கு சம்மதம் என்றால் அனைவருக்கும் சம்மதம். நாகரீகமடைந்த முஸ்லீம்களும், பிற சமுதாயத்தினரும் இதை ஏற்க மாட்டார்கள். மேலும் இஸ்லாம் இப்படிப்பட்ட செயல்களை போதிக்கவில்லை என்றார் கடுமையாக.
இதற்கு முன்பு இதே எகிப்தைச் சேர்ந்த ஒரு மத குரு, இஸ்லாமியர்கள் கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கக் கூடாது. அது ஏற்கக் கூடியதல்ல என்று கூறி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடந்த சமயத்தில் பரபரப்பைக் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications