5 அடி 6 அங்குலம்.. ஒரு ஆள் கூட பக்கத்தில் வர மாட்டேங்குறாங்களே.. வருத்தத்தில் பிங் பிங்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த எங் பிங் பிங் என்ற 37 வயதுப் பெண்ணுக்கு ஒரே ஒரு கவலைதான். அதுவும் கூட காமெடி கவலை. காரணம் இவரிடம் யாருமே டேட்டிங் செய்ய விருப்பம் தெரிவிப்பதில்லையாம். காரணம் இவரது உயரம்.
சீனப் பெண்கள் பெரும்பாலும் குள்ளமாகத்தான் இருப்பார்கள். ஆனால் இவரோ 5 அடி 6 அங்கலம் உயரத்தில் இருக்கிறாராம். இந்த உயரம் காரணமாகவே யாரும் இவரிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதில்லையாம்.

ஆனால் இதற்கெல்லாம் இந்த பிங் பிங் மனம் உடைந்து போகவில்லையாம். மாறாக, என்னிடம் நெருங்க யாருக்கும் தைரியம் இல்லையே என்று கலாய்க்கிறார் ஆண்களை.
விற்பனை மேலாளர்..
பிங் பிங் சிங்கப்பூரில் ஹேர் கேர் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை மேலாளராக இருக்கிறார். வழக்கமான சீனத்துப் பெண்களைப் போல இல்லாமல் செம ஹைட்டாக இருக்கிறார்.
நல்ல அழகியும் கூட...
ஹைட்டாக இருந்தாலும் நல்ல அழகியாக இருக்கிறார். வசீகர முகம், வாளிப்பான தோற்றம் என எந்த ஆணுக்குமே உற்சாகம் தரும் தோற்றம்தான். ஆனால் உயரம்தான் பல ஆண்களுக்கு இடிக்கிறதாம்.
பாசிட்டிவ் பொண்ணு பாஸ்...
நான் ஒரு பாசிட்டிவ் சிந்தனை கொண்ட பெண். தெருவில் நடக்கும்போதும், மனிதர்களைச் சந்திக்கும்போதும் நான் மிகுந்த நம்பிக்கையுடன், துணிச்சலுடன் எதிர்கொள்வேன்.
பசங்க பயப்படுவாங்க...
என்னிடம் நெருங்கவே ஆண்கள் அஞ்சுவார்கள். காரணம் எனது உயரம் மட்டுமல்ல. பட்டென்று பேசும் எனது வெளிப்படையான குணமும் கூட ஒரு காரணம். மேலும் ஈகோவும் இன்னொரு காரணம்.
டேட்டிங்கில் எனக்கும் ஆர்வம் இல்லை...
டேட்டிங்கில் எனக்கும் கூட ஆர்வம் கிடையாது. யாராவது வந்து சொன்னால் கூட பரவாயில்லை. எல்லாம் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்கள். நான் என்ன செய்வது.
செலவு செய்ய என்னிடம் காசு உள்ளது...
வழக்கமாக பெண்களுக்காக செலவு செய்ய ஆண்கள் முண்டியடிப்பார்கள். ஆனால் அதை நான் விரும்புவதில்லை. என்னிடம் காசு உள்ளது. அதை எனக்காக செலவிடவும் எனக்குத் தெரியும். பிறரின் காசில் வாழ நான் விரும்புவதில்லை.
சிரிக்க வச்சா போதும்...
எனக்கென்று உள்ள ஆண் வந்தால் அப்போது பார்க்கலாம். அவன் என்னை சிரிக்க வைக்க வேண்டும். விழுந்து விழுந்து சிரிக்க வைக்க வேண்டும். எனக்காக வாழ வேண்டும் என்று கூட நான் ஆசைப்படவில்லை. தன்னம்பிக்கை மிகுந்தவனாக இருக்க வேண்டும்.
நல்லா சாப்பிடுவேன்.. நல்லா குடிப்பேன்...
நான் நன்றாக சாப்பிடுவேன். நன்றாக குடிப்பேன். நன்றாக ஊர் சுற்றுவேன். யாரையும் சார்ந்து நான் வாழ விரும்புவதில்லை. என் உலகில் நான்தான் ராணி என்றார் பிங் பிங்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications