ஆண்களுக்கு ஒல்லிக்குச்சி உடம்புப் பெண்களைப் பிடிக்காது... கூறுகிறார் பத்மலட்சுமி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆண்களுக்கு நன்கு பூசினாற் போல உள்ள பெண்களைத்தான் பிடிக்கும், சைஸ் ஜீரோ, ஒல்லிக்குச்சிப் பெண்களைப் பிடிக்கவே பிடிக்காது என்று கூறியுள்ளார் பத்மலட்சுமி.

லண்டன் டிவியில் டாப் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்து வருகிறார் பத்மா.

இவரது நிகழ்ச்சிக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை விட 43 வயது பத்மாவின் சிக் உடம்புக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

உணவின் மீதான தனது காதல், உடற்பயிற்சி, உடல்வனப்பைப் பேணுவது ஆகியவை குறித்து பிட்னஸ் என்ற பத்திரிக்கைக்குபேட்டி அளித்துள்ளார் பத்மா.. அதிலிருந்து சில துளிகள்...

வாரத்திற்கு 5 நாள் ஜிம்மில்தான்...

வாரத்திற்கு 5 நாள் ஜிம்மில்தான்...

வாரத்திற்கு 5 நாட்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்து விடுவாராம் பத்மா. இதுதான் அவரது உடல்கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு முக்கியக் காரணமாம்.

சீசனுக்கு சீசன் மாறும் உடல் அளவு

சீசனுக்கு சீசன் மாறும் உடல் அளவு

அதேசமயம் மிகவும் மெலிந்த தோற்றத்தை விரும்பாதவராம் பத்மா. இதனால் உடம்பை எப்போதும் மெலியாத வகையில், நோஞ்சான் போலக் காட்சி தராத வகையில் பார்த்துக் கொள்கிறாராம்.வருடத்திற்கு 2 முறை அவரது மார்பளவு, இடுப்புச் சுற்றளவு மாறுமாம்.

நெளிவு சுளிவு அவசியம்

நெளிவு சுளிவு அவசியம்

ஆண்களின் ரசனை குறித்த ஒரு கேள்விக்கு பத்மா பதிலளிக்கையில், ஆண்களுக்கு ஸ்லிம்மான பெண்களைப் பிடிப்பதில்லை. மாறாக கொஞ்சமாச்சும் சதைப்பற்று இருந்தால்தான் ரசிக்கிறார்கள். என்னிடமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

கர்ப்பமாக இருந்தபோது

கர்ப்பமாக இருந்தபோது

நான் கர்ப்பமாக இருந்தபோது எனது உடல் வாகை பலரும் பாராட்டினார்கள். இப்போதுதான் அழகாக இருக்கிறாய் என்றனர் என்றார் பத்மா. இவரது பெண் குழந்தை கிருஷ்ணாவுக்கு இப்போது வயது 3 ஆகிறதாம்.

நல்லா சாப்பிடுங்க.. உடற்பயிற்சி செய்யுங்க

நல்லா சாப்பிடுங்க.. உடற்பயிற்சி செய்யுங்க

உடல் ஆரோக்கியத்தையும், வனப்பையும் எப்படிப் பேணுவது என்ற கேள்விக்கு,நல்ல ஆரோக்கியமான சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும், டயட்டை பின்பற்ற வேண்டும், தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றுகிறார்.

ஸ்வீட் - கறி வேண்டாம்

ஸ்வீட் - கறி வேண்டாம்

மேலும் அவர் கூறுகையில், அசைவம் சாப்பிட மாட்டேன். மது அருந்த மாட்டேன். இனிப்பு பக்கம் போகவே மாட்டேன். பிரைட் புட் சாப்பிட மாட்டேன். கோதுமை சேர்க்க மாட்டேன்.. இதுதான் எனது ஆரோக்கியமான அழகின் ரகசியம் என்று கூறி அழகாகச் சிரிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+