நடிகை ஆலியா பட்டின் அண்ணனை சந்தித்து ஃபிரெண்ட் ஆன தீவிரவாதி ஹெட்லி
நியூயார்க்: மும்பையில் தங்கியிருந்தபோது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சகோதரர் ராகுல் பட்டை சந்தித்து பழகியதாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று அவர் 4வது நாளாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

மும்பை விமான நிலையம்
நான் மும்பையில் தங்கியிருந்தபோது விமான நிலையத்தையும் உளவு பார்த்தேன். இது குறித்து மேஜர் இக்பாலிடம் தெரிவித்தபோது இது மோசமான யோசனை என்றார்.

தீவிரவாதிகள்
மும்பை விமான நிலையத்தை தாக்க மேஜர் இக்பால் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அந்த இடத்தை தாக்காமல் விடுவதால் லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் வருத்தம் அடைந்தனர்.

அமெரிக்கா
2008ம் ஆண்டு மே மாதம் நான் பிலடெல்பியா மற்றும் நியூயார்க்கிற்கு சென்றேன். 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பாகிஸ்தானில் தங்கிவிட்டு அமெரிக்கா சென்றேன்.

ராணா
அமெரிக்காவில் நான் ராணாவுடன் பேசினேன். அப்போது அவரிடம் நான் மும்பை சென்று வந்தது பற்றி தெரிவித்தேன். நான் மும்பை விமான நிலையத்தை உளவு பார்த்தும் அந்த இடத்தை லஷ்கர் இ தொய்பா தேர்வு செய்யவில்லை.

ராகுல் பட்
ராகுல் பட்டை விலாஸ் என்பவர் மூலம் சந்தித்து பழகினேன். (ராகுல் பட் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகன், ஆலியா பட்டின் சகோதரர்). பாடி பில்டிங் போட்டியின்போது ராகுலை சந்தித்தேன். மும்பையில் உள்ள மோக்ஷ் ஜிம்மின் பொறுப்பாளர் விலாஸ்.(ஆலியா, ராகுலின் தந்தை ஒன்று ஆனால் தாய் வேறு).

தாக்குதல்
மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அன்று தென் மும்பை பக்கம் செல்ல வேண்டாம் என ஹெட்லி ராகுலை எச்சரித்ததாக முன்பு செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications