எரியும் நெருப்பில் எண்ணெய்.. மெக்சிகோ நடவடிக்கையால் பதற்றமான டிரம்ப்! விஷயம் இதுதான்
மெக்சிகோ: பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசாவை காலி செய்துவிட்டு, அங்கு கேளிக்கை பூங்காக்களை உருவாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக மெக்சிகோ கூறியுள்ளது. மட்டுமல்லாது பாலஸ்தீன தூதரை மெக்சிகோ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை டிரம்ப்பை கடுப்படைய வைத்திருக்கிறது. ஏற்கெனவே வரி விஷயத்தில் பக்கத்து நாடுகளை கன்ட்ரோல் செய்ய நினைக்கும் டிரம்ப்புக்கு மெக்சிகோ கொடுத்தது மிகப்பெரிய ஷாக்தான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாலஸ்தீனத்திலிருந்து தங்கள் நாட்டுக்கான புதிய தூதராக நாடியா ரஷீத் செயல்பட மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பம் கடந்த 20ம் தேதி வரவேற்றிருக்கிறார். பாலஸ்தீனத்திற்கான தூதர் மெக்சிகோவில் செயல்பட அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே 20ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக தூதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மெக்சிகோவின் அயல் நாட்டு உறவு விஷயத்தில் இந்த சம்பவம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷெயின்பம் யூதராக இருந்தாலும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது பாலஸ்தீன தூதரை அங்கீகரித்துள்ளார். இந்த விஷயம் மற்ற யாரை விடவும் அமெரிக்காவின் அதிபரான டிரம்ப்பின் கண்களை அதிகமாக உறுத்த செய்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசாவை நாங்கள் விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறோம் என்றும், அந்த இடத்தில் கேளிக்கை பூங்காக்காளை உருவாக்கி அழகான சுற்றுலா மையமாக மாற்றுவோம் என்றும் சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப் வாயை விட்டிருந்தார். இதற்காகவே காத்துக்கொண்டிருந்ததை போல இஸ்ரேல் அதிபரும் ஆமாம் சாமி போட்டார். ஆக பிளான் இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் பக்கத்து நாடான மெக்சிகோ பாலஸ்தீன தூதரை அங்கீகரித்திருப்பது டிரம்ப்பை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
மெக்சிகோ இந்த விஷயத்தை திடீரென செய்யவில்லை. அந்நாட்டின் வரலாற்றை எடுத்து பார்த்தால், அது காலம் காலமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைதான் கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு 1975ம் ஆண்டு முதல் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போர் குற்றத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் அந்நாட்டுக்கு எதிராக மெக்சிகோ தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. மெக்சிகோ-பாலஸ்தீன உறவில் இந்த சம்பவம் மிக முக்கிய மைல் கல்லாக இருந்தது.
இருப்பினும் வரி விஷயத்தில் மெக்சிகோவை கட்டுப்படுத்தி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப் கணக்கு போட்டிருந்தார். ஆனாலும் அதை மீறி பாலஸ்தீனத்துடன் மெக்சிகோ நெருக்கம் காட்டியுள்ளது.
வழக்கமாக அமெரிக்காவை ஒட்டி இருக்கும் நாடுகள் அமெரிக்க தன்மையையே கொண்டிருக்கும் என்று சொல்லப்படும். ஆனால் இலத்தின் அமெரிக்க நாடுகள் தங்களின் சுயமரியாதையை ஒருபோதும் அமெரிக்காவிடம் அடகு வைத்ததாக வரலாறு இல்லை. பாலஸ்தீன தூதர் அங்கீகரிப்பு மூலம் இதனை மெக்சிகோ மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications