தாய்ப்பால் விழிப்புணர்வு விளம்பரத்தில் சர்ச்சை.. இது மெக்ஸிகோவில்!
மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் தாய்ப்பால் தருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வைக்கப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தாய்ப்பாலின் அருமை பெருமைகளை சொல்வதற்குப் பதில் பெண்களின் ஆபாசப் படத்தை வைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாய்ப்பால் தருவது போன்ற படத்தை வைத்திருந்தாலாவது பரவாயில்லை. மாறாக இரு பெண்கள் தங்களின் வெற்று மார்பகங்களுடன் போஸ் தருவது போன்ற படத்தை வைத்து கவர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும், பெண்களை தவறாக சித்தரித்துள்ளதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு விளம்பர போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதில் இரு பிரபலமான பெண்கள் உள்ளனர். இருவரும் மேலாடை அணியாமல், வெற்று மார்புகளுடன் நிற்கிறார்கள். அவர்களது மார்பகங்களை மறைத்தபடி ஒரு வாசகம் உள்ளது. அதில், உங்களது குழந்தைகளுக்கு முதுகைக் காட்டாதீர்கள்.. உங்களது மார்பகங்களை அவர்களுக்குக் கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாய்ப்பால் உரிமைக் குழுவின் தலைவரான ரெஜீனா தாமஸ் கூறுகையில், இது பெண்களை செக்ஸ் பொருளாக காட்டுவது போல உள்ளது. தாய்ப்பால் தருவதன் முக்கியத்துவம் குறித்து அதில் ஒரு வார்த்தை கூட இல்லை. மாறாக பெண்களை இழிவுபடுத்துவது போல உள்ளது. இது தவறான கருத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.
மேலும் தாய்ப்பால் தருபவர்கள் மட்டுமே நல்ல தாயார், மற்றவர்கள் கெட்ட தாய்மார்கள் என்பது போலவும் இது உள்ளது என்றார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மெக்ஸிகோவில்தான் தாய்ப்பால் தரும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாம். இங்கு 14 சதவீத இளம் தாய்மார்கள்தான் தாய்ப்பால் தருகிறார்களாம். அதாவது குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு இவ்வளவு குறைந்த அளவிலான பெண்களே தாய்ப்பால் தருகிறார்களாம்.
ஆனால் இப்படி தாய்ப்பால் தருவதில் மெக்ஸிகோ பெண்கள் தயக்கம் காட்டுவதற்கு பெண்கள் தரப்பில் வேறு சில காரணங்கள் கூறப்படுகின்றன. பிற நாடுகளைப் போல மெக்ஸிகோவில் புதுத் தாய்மார்களுக்கு பேறு கால விடுப்பு அதிகம் அளிக்கப்படுவதில்லை. மேலும் ஊட்டச் சத்துக் குறைபாடும் அங்கு அதிகம். எனவேதான் தங்களால் அதிக காலத்திற்கு தாய்ப்பால் தர முடிவதில்லை என்கிறார்கள் இளம் தாய்மார்கள்.
மேலும் வேலை நேரத்தின்போது தாங்கள் தாய்ப்பால் கொடுக்க நிறுவனங்களால் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் இளம் தாய்மார்களின் இன்னொரு குற்றச்சாட்டாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications