பமீலாவுடன் ஜாலி.. கணவரிடம் சிக்கி பம்மிய இளைஞர்.. மனைவிகிட்ட சொல்லாதீங்கன்னு காலை பிடித்து அழுகை

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ: காதலியை ரகசியமாக சந்திக்க தனது வீட்டிலிருந்து அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் பாதாள சுரங்கம் அமைத்து அந்த பெண்ணின் கணவரிடம் மாட்டி கொண்டு தனது மனைவியிடம் சொல்ல வேண்டாம் என கெஞ்சிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். அது போல் கள்ளக்காதலுக்கும் கண்ணில்லை. கள்ளக்காதலியை பார்க்க கள்ளகாதலனோ அல்லது காதலனோ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று ஜாலியாக இருந்து விட்டு யாராவது வரும் நேரத்தில் துண்டை காணோம், துணியை காணோம் என வியர்த்து விறுவிறுத்து ஓடி வருவதை சினிமாக்களில் பார்த்துள்ளோம்.

இதெல்லாம் ஓல்டு பேஷன் என்பதை போல் மெக்சிகோவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவில் கட்டட பணியாளராக உள்ளவர் ஆல்பெர்ட்டோ. இவருக்கு திருமணமாகிவிட்டது.

காதல்

காதல்

இவர் திசுவானா என்ற இடத்தை சேர்ந்த பமீலாவுடன் காதலில் இருந்தார். திடீரென பமீலாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் கட்டட பணியாளரான ஆல்பெர்ட்டோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

 வீட்டிலில்லாத கணவர்

வீட்டிலில்லாத கணவர்

பமீலாவின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்குச் செல்ல ஒரு சுரங்க பாதையை அமைத்தார். இதன் வழியாக பமீலாவின் கணவர் வீட்டிலில்லாத நேரம் பார்த்து அந்த சுரங்கம் வழியாக தனது காதலியை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார். அது போல் அந்த பெண்ணின் கணவர் ஒரு நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

சுரங்கம் வழியாக சந்திப்பு

சுரங்கம் வழியாக சந்திப்பு

அந்த நபர் வரும் நேரம் பார்த்து ஆல்பெர்ட்டோ சுரங்கம் வழியாக தனது வீட்டுக்கு சென்றுவிடுவார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது ஆல்பெர்ட்டோவுக்கு பொருத்தமானது. ஆம், ஒரு நாள் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது.

ஜார்ஜ்

ஜார்ஜ்

பமீலாவின் கணவர் ஜார்ஜ் முன்கூட்டியே வீட்டுக்கு வந்ததை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சோபாவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். எப்படியோ ஜார்ஜிடம் ஆல்பெர்ட்டோ சிக்கினார். பின்னர் ஒரு சுரங்க பாதை இருப்பதையும் ஜார்ஜ் கவனித்தார். அதில் இறங்கி சென்றார். அது நேராக ஆல்பெர்ட்டோவின் வீட்டுக்கு சென்றது.

கெஞ்சிய ஆல்பெர்ட்டோ

கெஞ்சிய ஆல்பெர்ட்டோ

அப்போது வீட்டில் ஆல்பெர்ட்டோவின் மனைவி தூங்கிக் கொண்டிருந்தார். தனது மனைவியிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என ஜார்ஜின் காலில் விழுந்து ஆல்பெர்ட்டோ கேட்டுக் கொண்டார். எனினும் விடாத ஜார்ஜ், அவரது மனைவியிடம் நடந்த விஷயத்தை கூற இரு ஆண்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் வந்து ஆல்பெர்ட்டோவை இழுத்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+