இந்திய பெருங்கடலில் மிதந்த 122 பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்களா?: தேடும் விமானங்கள்
கோலாலம்பூர்: இந்திய பெருங்கடல் பகுதியில் 122 பொருட்கள் மிதந்ததை பிரான்ஸ் செயற்கைக்கோள் படம்பிடித்ததை அடுத்து அப்பகுதியில் 11 விமானங்கள் மற்றும் 5 கப்பல்களை அனுப்பி மலேசிய விமானத்தை தேடி வருகிறது ஆஸ்திரேலியா.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசிய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பிரான்ஸ்
இந்திய பெருங்கடலில் 122 பொருட்கள் மிதந்ததை பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பியது. அந்த பொருட்கள் கடலுக்குள் விழுந்த விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது. கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

விமாங்கள், கப்பல்கள்
பிரான்ஸ் செயற்கைக்கோள் புகைப்பட விவரம் கிடைத்ததை அடுத்து மலேசிய விமானத்தை தேடும் பணியில் 11 விமானங்கள் மற்றும் 5 கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.

8 மணிக்கு
இன்று காலை 8 மணிக்கே தேடுதல் பணியில் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தேடலின்போது விமானங்கள் சில பொருட்களை கண்டுள்ளன. ஆனால் அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அந்த பொருட்களை மறுபடியும் காண முடியவில்லை. இந்நிலையில் இன்றும் வானிலை மோசமடைந்ததால் விமானங்கள் திரும்பிச் சென்றன. கப்பல்கள் மட்டும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுள்ளன.












Click it and Unblock the Notifications