மொசாம்பிக்கில் கிடைத்தது மாயமான மலேசிய விமான பாகங்களா?: ஆய்வை துவங்கிய ஆஸி.
சிட்னி: மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என ஆய்வு செய்யும் பணி துவங்கிவிட்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.

தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியா தலைமையில் விமானத்தை தேடும் பணி ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது. இருப்பினும் தேடல் நடக்கும் இடத்தில் விமான பாகம் எதுவும் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில் மொசாம்பிக்கில் 2 முறை விமான பாகங்கள் கரை ஒதுங்கின. அவை மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா என்பதை தெரிந்து கொள்ளும் ஆய்வு துவங்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் போயிங் நிறுவன நிபுணர்கள் விமான பாகங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு முடிந்த உடன் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications