லா ரீயூனியனில் கிடைத்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதா?: நம்ப மறுக்கும் உறவினர்கள்
கோலாலம்பூர்: லா ரீயூனியன் தீவில் கிடைத்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது என்பதை நம்ப மாட்டோம் என்று பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாகக் கூறி அங்கு விமானத்தை தேடும் பணி ஓாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இந்திய பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானத்தின் வால் பகுதி கிடைத்தது. அந்த பகுதி போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது ஆய்வில் தெரிய வந்தது. மாயமான விமானமும் போயிங் 777 ரகம் தான்.
லா ரீயூனியனில் கிடைத்துள்ள பாகம் மாயமான விமானத்தினுடையது தான் என பிரான்ஸை சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கடந்த வாரம் தெரிவித்தார்.
கிடைத்துள்ள பாகம் மாயமான விமானத்தினுடையது என்பதை நம்ப அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மறுக்கிறார்கள். தீவிர ஆய்வு முடிவு வரும் வரை மலேசிய அரசின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications