மாயமான மலேசிய விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம்: மலேசிய பிரதமர் வாக்குறுதி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 நிச்சயம் கண்டுபிடிக்கப்படும் என்று அது மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த இன்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் ராடாரில் இருந்து மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் தேடல் பணி மாதக் கணக்கில் நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

ஓராண்டு
மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் விமானம் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

நஜிப் ரசாக்
சர்வதேச நாடுகளுடன் சேரந்து கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து மாயமான மலேசிய விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று தெரிவித்துள்ளார்.

பொருட்கள்
விமானம் விழுந்த இடத்தில் மிதந்த பல பொருட்கள் எடுக்கப்பட்டது. ஆனால் அவை மீன் பிடிக்கையில் மீனவர்கள் விட்டுச் சென்றது என்று தெரிய வந்தது.

பீப்
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வரும் ஒலியை சிறப்பு கருவிகள் இரண்டு மூன்று முறை கண்டறிந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை வைத்தும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications