மாயமான மலேசிய விமானம்: ரீயூனியன் தீவில் மேலும் சில பாகங்கள் கண்டெடுப்பு
லண்டன்: மொரீஷியஸ் அருகே இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் மேலும் சில விமானப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. ஆனால், அதற்கு ஆதாரமாக அந்த விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் தான், ஓராண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் பிரான்ஸின் கட்டுப்பாட்டில், இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அந்த விமானப் பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
தீவில் கண்டெடுக்கப்பட்ட அந்த பாகம், பிரான்ஸில் விமான விபத்து புலன்விசாரணை ஆய்வுக் கூடத்தில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஆய்வில் அந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது உறுதியானது.
அப்பகுதியில் இதற்கு முன்னர் போயிங் 777 ரக விமானம் விபத்தில் சிக்கவில்லை என்பதால், இது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறன்று லா ரீயூனியன் தீவில் உள்ள புனித டெனிஸ் நகரின் தெற்கு பகுதியில் விமானத்தின் கதவு போன்ற பொருள் கரை ஒதுங்கியது.
இந்நிலையில், நேற்றும் சில விமானப் பாகங்கள் இப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications