எதுவும் கிடைக்கவிட்டால் மாயமான மலேசிய விமான தேடல் பகுதி அதிகரிக்கப்படும்: ஆஸி.
கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370-இன் பாகங்கள் தற்போது தேடப்படும் இடத்தில் கிடைக்காவிட்டால் தேடல் பகுதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் ஆஸ்திரேலியா தலைமையில் பலநாடுகள் தேடி வருகின்றன.

பாகம்
விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் நீர்மூழ்கி கப்பல்கள், அதிநவீன கருவிகள் மூலம் தேடல் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் அங்கு தான் விழுந்ததா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

தேடல்
சோனார் கருவிகள் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து வடக்குப்பகுதியில் இருக்கும் 60 ஆயிரம் சதுரமீட்டர் இடத்தில் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது.

தேடல் பகுதி
கடலுக்குடி அடியில் தேட வேண்டிய பகுதியில் இன்னும் 40 சதவீதம் மீதமுள்ளது. அங்கு தேடியும் விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காவிட்டால் தேடல் பகுதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வானிலை
தேடல் பகுதியை அதிகரித்தால் அங்கு தேடி முடிக்க ஓராண்டு வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் வானிலை மோசமடைந்தால் தேடல் பணியை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாது.

விமானம்
நாங்கள் சரியான இடத்தில் தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது. விமானம் இந்த இடத்தில் விழுந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்து விடுவோம் என ஆஸ்திரேலிய போக்குவரத்து துறை அமைச்சர் வாரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications