‛ரெட்லைட் ஹாலண்ட்’.. இதை மட்டும் செய்யவே மாட்டேன்.. இஸ்ரேலிய ஆதரவு நிறுவனத்தை விளாசிய மியா கலிஃபா

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மியா கலிஃபா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவருடன் வணிக ஒப்பந்தம் போட்டிருந்த நிறுவனம் அதை ரத்து செய்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள மியா கலிஃபா, "நான் காலனித்துவம் பக்கம் நிற்பேன் என்று நினைக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி, யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது. இதிலிருந்து தப்பியவர்கள் கப்பலில் பாலஸ்தீனத்திற்கு வந்தடைந்தார்கள். இப்படி வரும்போது அவர்கள் பேனர் ஒன்றை கையில் ஏந்தியிருந்தார்கள். அதில், "ஜெர்மனி எங்கள் குடும்பங்களை அழித்துவிட்டது. நீங்கள் எங்கள் நம்பிக்கையை அழித்துவிடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்து. இதான் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த வரலாறு. இவர்களுடைய மோசமான நிலையை பார்த்த ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கான வாக்கெடுப்பில் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

Mia Khalifa protest against Israel on the Palestinian issue

அதன் பின்னர் 1949 முதல் 1967ம் ஆண்டு வரை இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மிக தீவிரமாக ஆக்கிரமிக்க தொடங்கியது. தற்போது மிக மிக சொச்சமான அளவில் உள்ள நிலப்பரப்பில்தான் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படியாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. எவ்வளவு முயன்றும் காசாவை இஸ்ரேலால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. எனவே அதை ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றியிருக்கிறது.

கடந்த காலங்களில் பாலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினரும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை தொடங்கினர். எனவே இவர்களை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியது. பின்னர் இதையே சாக்காக வைத்து கடந்த காலங்களில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தீவிரமான தாக்குதல்களையும் நடத்தியது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் இரு தினங்களுக்கு முன்னர் காலை பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஹமாஸ். ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் இதற்கு முன்னர் சில தாக்குதல்களை நடத்தியிருந்தாலும் தற்போது நடத்திய தாக்குதல் மிகவும் வீரியமானதாக இருக்கிறது. எனவேதான் இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது. இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மோதல் குறித்து சர்வதேச தலைவர்கள் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் ஆதரவளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பிரபல நடிகையான மியா கலிஃபா பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருந்தார்.

மியா கலிஃபா பிறந்தது லெபனானில். அந்நாட்டில் தற்போது இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, காசாவின் ஹமாஸ் அமைப்புக்கும், முழு பாலஸ்தீன விடுதலைக்கும் ஆதரவாக குரலெழுப்பி வருகிறது. இயல்பாகவே லெபனான் மக்கள் பாலஸ்தீனம் பக்கம்தான் நிற்கிறார்கள். அப்படி இருக்கையில் மியா கலிஃபா பாலஸ்தீனத்திற்கு அதரவாக ட்வீட் செய்தது இயல்பானதுதான். ஆனால் இவருடன் வணிக ஒப்பந்தம் செய்திருந்த ரெட்லைட் ஹாலண்ட் நிறுவனம், தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதற்கான காரணமாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மியா கலிஃபாவின் ட்வீட்டை சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கு மியா கலிஃபா கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். அதாவது, "நீங்கள் மீண்டும் என் பெயரை உச்சரிக்கும் முன், எந்த திசையும் இல்லாத எந்த நோக்கமும் இல்லா உங்கள் சோகமான சிறிய நிறுவனத்தை பற்றி கவலைப்படுங்கள். இப்போதும் எப்பொழுதும் அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன். உங்கள் நிறுவனத்தில் எனது முதலீட்டிற்காக நீங்கள் பிச்சை எடுத்ததை ஆராய்ச்சி செய்து பாருங்கள். நான் லெபனானைச் சேர்ந்தவள். நான் காலனித்துவத்தின் பக்கம் இருப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டின் ஸ்கீன் ஷாட் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+