'டெட்லி' ஜாக்சன்.. மரணத்திற்குப் பின்னரும் நம்பர் 1!
வாஷிங்டன்: மரணத்திற்குப் பின்னரும் அதிக பணம் சம்பாதித்து நம்பர் 1 ஆக பட்டியலில் இடம் பெற்றுள்ளார் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன்
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை உலக அளவில் மரணமடைந்த பிரபல பணக்காரர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் பலரும் மரணத்திற்குப் பின்னரும் அவர்களின் பெயரின் மூலம் சம்பாதித்துக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன்
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இன்னமும் ரசிகர்கள் மனதில் மறையாமல் இருக்கிறார். அவரது நிறுவனம் கடந்த ஆண்டில் ரூ.965 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

ஆல்பமும் சாதனை
மைக்கேல் ஜாக்சனின் ‘கிங் ஆப் ராக் அன்ட் ரோல்' என்ற இசை ஆல்பம் இந்த ஆண்டு அமோகமாக விற்று சாதனை படைத்துள்ளது. எனவே அவர் முதலிடம் பெற்றுள்ளார்.

எல்விஸ் பிரெஸ்லி
ஏற்கனவே முதலிடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 1977ம் ஆண்டு மாரடைப்பில் மரண மடைந்தார். இவரது மகள் லிசா - மேரி மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி ஆவார்.

எலிசபெத் டெய்லர்
கார்டூனிஸ்ட் சார்லஸ் எம் சுலோஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 5-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பிரபல அறிவியல் மேதை ஐஸ்டீனும் இடம் பெற்றுள்ளார்.

பாடகி மடோனா
உயிருடன் வாழும் பிரமுகர்களில் பணக்காரர் பட்டியலில் கவர்ச்சி பாப் பாடகி மடோனா முதலிடம் வகிக்கிறார். இவர் ரூ.750 கோடி சம்பாதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications