சோடா கம்பெனி ஆரம்பிக்க ஆசைப்பட்ட மைக்கேல் ஜாக்சன்!!!
லாஸ் ஏஞ்சலெஸ்: மறைந்த மைக்கேல் ஜாக்சனின் ரகசிய டைரி ஒன்று கிடைத்துள்ளது. அதில், அவரது சின்னச் சின்ன ஆசைகளை நிறைய எழுதி வைத்துள்ளார் ஜாக்சன்.
ஒவ்வொரு பெரிய மனிதருக்குள்ளும் இன்னொரு நபர் இருப்பார். உண்மையில் அவர்தான் ஒரிஜினல் நபராகவும் இருக்கும்.
அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் ஒரு நல்ல டான்ஸர் என்று மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத ஜாக்சனின் பல முகங்களை அவரது ரகசிய டைரி வெளிப்படுத்துகிறது.

நடிப்பு தாகம்
ஜாக்சனுக்குள் நடிப்பு தாகம் நிறையவே இருந்தருக்கிறது. பெரிய நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

டான்ஸில் பெரிய ஆளாக வேண்டும்
பின்னர் நடனத்தில் மிகப் பெரிய புகழைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதுவும் எப்படி, உலகப் புகழ் பெற்ற ஜீன் கெல்லி, பிரெட் அஸ்டையர் ஆகியோரை விட மிகப் பெரிய புகழைப் பெற விரும்பியுள்ளார்.

பெரிய்ய்ய ஆளாக வேண்டும்
தனது டைரியில், நடிகராக வேண்டும். அப்போதுதான் பெரும் புகழைப் பெற முடியும். மிகப் பெரிய ஆளாக வேண்டும் என்று எழுதியுள்ளார் ஜாக்சன்.

சிமோன் புல்லருடன் இணையும் விரும்பினார்
சினிமாவில் நுழைந்து கலக்குவதற்காக அமெரிக்காவின் பிரபலமான சிமோன் புல்லரின் உதவியையும் நாட திட்டமிட்டிருந்தாராம் ஜாக்சன்.

6 வருஷம் ஆகுமா...
ஒரு படத்தில் நடித்து பெரிய ஆளாக 2 அல்லது 6 வருடமாகுமா.. ஆகட்டுமே.. புல்லரைப் பிடித்தால் ஆயிற்று என்று டைரியில் குறிப்பிட்டுள்ளார் ஜாக்சன்.

பிராட்வேயில் நாடகம் போட வேண்டும்
அதேபோல பிராட்வேயில் ஒரு நாடகம் போட வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது ஜாக்சனுக்கு. இதன் மூலம் நடிகர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்து பெரும் பணக்காரர் ஆகி விடலாம் என்று அவர் விரும்பினாராம்.

சோடா கம்பெனி ஆரம்பிக்கனும்
அதேபோல ஜாக்சனின் இன்னொரு சின்ன ஆசை என்ன தெரியுமா.. சோடா மற்றும் மிட்டாய் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பதாம்.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications