சாம்பியன் பெல்ப்ஸின் மனதில் நீச்சலடிக்கும் மிஸ் கலிபோர்னியா நிக்கோல்!
லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் விரைவில் தனது காதலி நிக்கோலைக் கரம் பிடிக்க இருக்கிறார்.
உலக சாதனைகள் பலவற்றைப் படைத்துள்ள அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மைக்கேல் பெல்ப்ஸ் மணக்கப் போகும் நிக்கோல் ஜான்சன் சாதாரண பெண் அல்ல.. மிஸ் கலிபோர்னியா பட்டம் வென்ற பேரழகி.
இவர்கள் இருவரும் கடந்த 2007ம் ஆண்டிலிருந்தே காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெல்ப்ஸும், நிக்கோலும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.

சாதனையாளர்...
ஒலிம்பிக்கில் 18 தங்கம் உள்பட மொத்தம் 22 பதக்கங்களை வென்ற சாதனையாளர் பெல்ப்ஸ். ஒட்டுமொத்தமாக 77 பதக்கங்களைக் குவித்தவர். உலகின் மிகச் சிறந்த நீச்சல் வீரர் என்ற பெருமையும் கொண்டவர்.

உற்சாகம்...
தற்போது அவர் மிகப் பெரிய உற்சாகத்தில் தான் இருப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். தனக்கும் நிக்கோலுக்கும் திருமணம் நடக்கப் போவதையும் அவர் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

திருமதி பெல்ப்ஸ்...
அதேபோல நிக்கோலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் திருமதி பெல்ப்ஸ் ஆகப் போகிறேன் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

பொத்தி வைத்திருந்த காதல்...
இருவருக்கும் சம வயதாகிறது. அதாவது 29 வயதாகிறது. இத்தனை காலமாக பொத்தி வைத்திருந்த காதலை இப்போது திருமணத்தில் முடிக்கப் போகிறார்கள் இருவரும்.

மிஸ்.கலிபோர்னியா....
நீச்சலில் பெல்ப்ஸ் கலக்குகிறார் என்றால் அழகிலும் கவர்ச்சியிலும் நிக்கோல் அசத்துகிறார். இவரைப் பற்றிய பேச்சுத்தான் இப்போது அமெரிக்காவில்.இவர் 2007ம் ஆண்டு மிஸ் கலிபோர்னியா அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப் ஆக வந்தவர். ஆனால் 2010ம் ஆண்டு டைட்டில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications