8 மாதங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மைக்கேல் ஷூமாக்கர்
பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்த முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 6 மாதங்களாக கோமாவில் இருந்தார். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி கோமாவில் இருந்து மீண்ட அவரை சுவிட்சர்லாந்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.

அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசியான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லூசியான் மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் ஷூமாக்கர் தற்போது எப்படி உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆறு மாதங்களாக கோமாவில் இருந்த அவருக்கு சாப்பிட, கை, கால்களை அசைக்க, நடக்க கற்றுக் கொடுக்கவே பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications