என் பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டில் சாப்பிட்டுவிட்டு வாங்க: மிஷல் ஒபாமா வேண்டுகோள்
வாஷிங்டன்: தனது 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தனது 50வது பிறந்தநாளை வரும் 17ம் தேதி கொண்டாடுகிறார். ஆனால் அவரின் பிறந்தநாள் பார்ட்டி வரும் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது.
பிறந்தநாளையொட்டி ஒபாமா தனது மனைவிக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.

ஹவாய்
ஒபாமா தனது மனைவி மிஷல் மற்றும் மகள்கள் மாலியா(15), ஷாஷா(12) ஆகியோருடன் ஹவாயில் விடுமுறையை கழிக்கச் சென்றார். அவர் மகள்களை அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட்டார். ஆனால் மிஷல் கணவரின் பிறந்தநாள் பரிசாக கூடுதல் நாட்கள் ஹவாயில் இருந்துவிட்டு வரவிருக்கிறார்.

அழைப்பு
வெள்ளை மாளிகையில் வரும் 18ம் தேதி நடக்கும் தன்னுடைய 50வது பிறந்தநாள் பார்ட்டிக்கு வருமாறு மிஷல் சிலருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பில் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

சாப்பாடு
பார்ட்டிக்கு வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு, சவுகரியமான ஷூக்கள் அணிந்து, நடன அசைவுகளை ஒத்திகை பார்த்துவிட்டு வருமாறு மிஷல் விருந்தாளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விருந்தில் சாப்பாடு வழங்கப்படாதாம். இந்த நிபந்தனைகள் பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது.

விருந்தாளிகள்
மிஷல் யார், யாருக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் ஹிப் ஹாப் கலைஞர் ஜே ஜி மற்றும் அவரது மனைவியும், பாப் பாடகியுமான பியான்ஸே நோலஸ் ஆகியோரும் நிச்சயம் விருந்துக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications