மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் பாதிப்பு.. சர்வதேச அளவில் பயனர்கள் தவிப்பு.. என்னதான் ஆச்சு?
வாஷிங்டன்: பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் கடந்த 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சர்வதேச அளவில் கணினிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டு பல பணிகளும் முடங்கியது. இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த 19 ஆம் தேதி சர்வதேச அளவில் முடங்க்கியது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது. விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' எனக் காட்டியது.

மைக்ரோசாப்ட் வின்டோஸ்: இதனால், விமான போக்குவரத்து, ஐடி நிறுவனங்கள் என பல துறைகளும் பாதிக்கப்பட்டன. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்தை சார்ந்தே தற்போது உலகில் பெரும்பாலான சேவைகள் நடக்கும் நிலையில் மைக்ரோசாப்ட் முடக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட் ஸ்டிரைக், கிளவுட் அடிப்படையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வுகளை விண்டோஸ் உடன் இணைந்து வழங்கி வருகிறது.
மீண்டும் பாதிப்பு: இதன் அப்டேட்டில் ஏற்பட்ட சில பிரச்சினையே, விண்டோஸ் பாதிப்புக்கு காரணமாக அமைந்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சினை சீர் செய்யப்பட்டது. மைக்ரோசாப்டில் ஏற்பட்ட இந்த பிரச்சினை சரியாகி சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் 365- ஐ அணுக முடியாத நிலை ஏற்பட்டது.
மைக்ரோசாப்ட் விளக்கம்: இதனால், மைக்ரோசாப்டின் 365 மற்றும் அதனுடன் இணைந்த கிளவுட் சேவைகள் மற்றும் azure Feautres-களை பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மைக்ரோசாப்ட் 365 சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
பயனர்கள் ஆதங்கம்: பயனர்களுக்கு சிரமத்தை குறைக்கும் விதமாக Rerouted ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. ஆனால், மைக்ரோசாப்ட் கொடுத்த இந்த மாற்று ஏற்பாடும் சரிவர செயல்படவில்லை என்று பயனர்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே, பிர்ச்சினையை சீர் செய்து இருப்பதாகவும், முழுமமையாக சரியாகும் வரை நிலமையை கண்காணித்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் விளக்கம் அளித்துள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications