Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்போன பாகிஸ்தான்.. எதிர்பாராத இடத்தில் திடீரென விழுந்த அடி.. இன்னும் நிறைய அடி விழ போகுதாம்.!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அங்குத் தனது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் டிஜிட்டல் மயமாக்கலுக்கு மைக்ரோசாப்ட் முக்கியப் பங்கு வகித்த நிலையில், இந்த முடிவு அந்த நாட்டின் ஐடி துறைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட மைக்ரோசாப்ட் அங்கிருந்து வெளியேறுவது உறுதி என்றே சொல்கிறார்கள். இந்தக் காரணங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்குப் பொருளாதாரச் சிக்கல் மிக மோசமாக இருக்கிறது. கூடவே அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ளவே பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது.

Microsoft Exits Pakistan After 25 Years Amid Economic and Political Challenges

மைக்ரோசாப்ட்

மேலும், பல முக்கிய நிறுவனங்களால் அங்குத் தொழில் நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் முடிவை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் பிஸ்னஸ் சூழல் மாறி வருவதாலேயே மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நுழைந்த மைக்ரோசாப்ட், தனது ஆபீஸ் சாப்ட்வேர் மற்றும் அஸூர் விற்பனையில் கவனம் செலுத்தியது. இருப்பினும், பாகிஸ்தானில் தனியாக எந்தவொரு டீமையும் வைத்திருக்கவில்லை.

இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் உள்ளூரில் ஐந்து ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் இது பாகிஸ்தானை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையும் இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகெங்கும் 9,000 பேரை வேலையை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மாஜி நிர்வாகி சொல்வது என்ன

முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகி ஜவாத் ரெஹ்மான் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் இது தொடர்பாகச் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானில் அனைத்து நிறுவனங்களுமே எதிர்கொள்ளும் சிரமங்களை அவர் விளக்கியுள்ளார். நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மை, நாணய மதிப்பிழப்பு மற்றும் குறைந்து வரும் வெளிநாட்டு முதலீடு ஆகியவை காரணமாக மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்திருக்கும் என்கிறார். இப்போது மைக்ரோசாப்ட் தனது பாகிஸ்தான் வாடிக்கையாளர்களுக்குப் பிராந்திய அலுவலகங்கள் மூலம் சேவைகளை வழங்கும். அது பாதிக்கப்படலாம்.

முடிவல்ல தொடக்கம்

மைக்ரோசாப்ட் வெளியேற்றத்துடன் இது நிற்கப் போவதில்லை. பாகிஸ்தானில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. எனவே, மைக்ரோசாப்ட் வெளியேறியது வெறும் தொடக்கமாக இருக்கலாம். வரும் காலங்களில் மேலும் பல நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறலாம் எனச் சொல்லப்படுகிறது.

காரணம் என்ன!

2021 முதல் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 55க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்தில் தொழில்நுட்பத்திற்கான நிதி 88% குறைந்துள்ளது. மோசமான இணைய உள்கட்டமைப்பு, அடிக்கடி ஏற்படும் மின் தடை மற்றும் மோசமான வணிகச் சூழல் போன்ற காரணங்களால் பாகிஸ்தானில் ஐடி துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்களாம்.

ஐடி ஊழியர்களுக்குப் பாதிப்பு

அதேநேரம் ஐடி நிறுவனங்களைப் பொருத்தவரை மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை நம்பியிருக்கும் பாகிஸ்தான் பிஸ்னஸ்களுக்கு இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் பார்டனர்ஷிப் நிறுவனங்கள் மூலம் மைக்ரோசாப்ட் தொடர்ந்து சப்போர்ட்டை தரும். இருப்பினும், மைக்ரோசாப்டின் வெளியேற்றம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+