சத்யா நாதெல்லா பேசும்போது.. திடீரென எழுந்த பாலஸ்தீன ஆதரவு கோஷம்! மைக்ரோசாஃப்ட் ஊழியர் டிஸ்மிஸ்
வாஷிங்டன்: காசா போரில் இஸ்ரேலுக்கு தொழில்நுட்பத்தை வழங்கியதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா பேசும்போது ஊழியர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
பாலஸ்தீனத்தை விட்டுவிடுங்கள் என்று மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஜோ லோபஸ், நாதெல்லா பேசும்போது கோஷம் போட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

வாஷிங்டன் சியாட்டில் பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சார்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் சத்யா உரையாற்ற தொடங்கினார். அப்போது நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான மென்பொருள் பொறியாளர் ஜோ லோபஸ், ஃப்ரீ பாலஸ்தீன் என்று கோஷமிட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சத்யா சில விநாடிகள் ஊழியரை பார்த்தார் பின்னர் தனது உரையை தொடங்கினார். பாதுகாவலர்கள் அந்த ஊழியரை அரங்கத்திலிருந்து வெளியேற்றினர்.
அப்போது, "சத்யா, மைக்ரோசாஃப்ட் பலஸ்தீனர்களை கொலை செய்கிறது என்பதை நீங்கள் காட்ட முடியுமா? இஸ்ரேலின் போர்குற்றங்களை Azure தொழில்நுட்பம் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை நீங்கள் காட்ட முடியுமா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊழியர் ஜோ லோபஸ் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மட்டுமல்லாது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளார். அதில், லோபஸின் கேள்வியை பார்த்து மற்ற ஊழியர்கள் அமைதியாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான போர் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவரும் அறிவர். இன்று வரை சுமார் 53,000க்கும் அதிகமான பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஐநா தலையீடு செய்து கூட போர் நிற்கவில்லை. இந்த போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சில தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது. இந்த உதவி காசா மக்களை கொல்ல உதவியிருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு.
பல்வேறு தரப்பினரும் இந்த குற்றச்சாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது வைத்திருக்கின்றனர். ஆனால் எங்கள் தொழில்நுட்பம் எந்த அப்பாவி மக்களையும் கொல்ல உதவவில்லை என்று நிறுவனம் அடித்து கூறுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தன்னுடைய அஸூர் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு விற்பனை செய்திருக்கிறது. இது கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை ஆகும். இது மென்பொருள்கள், சேமிப்பு, டேட்டா பகுப்பாய்வு மற்றும் AI சேவைகளை இணையம் மூலம் வழங்குகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் பற்றிய தரவுகளை இஸ்ரேல் திரட்டி வைத்திருக்கிறது. இந்த தரவுகளை அஸூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்து தாக்குதலை நடத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications