மைலி சைரஸ்.... 2015ம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான சைவ அழகியாக தேர்வு!
லாஸ் ஏஞ்சலெஸ்: பேடா அமைப்பின் 2015ம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான சைவ அழகியாக மைலி சைரஸ் தேர்வாகியுள்ளார்.
பாப் உலகின் ராணி மடோனா என்றால் இளவரசி மைலி சைரஸ். இவரது குரலுக்குக் கிறங்கிப் போய்க் கிடப்பவர்கள் ஏராளம் ஏராளம்.
பாப் இளவரசியாக வலம் வரும் மைலிக்கு இப்போது புதிய பெருமை ஒன்று கிடைத்துள்ளது.

சைவ அழகி...
பேடா எனப்படும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிரான அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த கவர்ச்சிகரமான சைவ அழகியைத் தேர்வு செய்து கெளரவித்து வருகிறது.

மைலி சைரஸ்...
2015ம் ஆண்டின் கவர்ச்சிகரமான சைவ அழகியாக தற்போது மைலி சைரஸை தேர்வு செய்துள்ளது பேடா அமைப்பு.

பிற 100 அழகிகள்...
ஏரியானா கிராண்டி, எல்லி கோல்டிங், பிரின்ஸ் லின்க்லேட்டர், ரிச்சர்ட் லின்க்லேட்டர் உள்பட 100 பிற அழகிகளைத் தோற்கடித்து இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார் சைரஸ்.

அருமை... பெருமை...
மைலி சைரஸ் குறித்து பேடா அமைப்பும் புகழாரம் சூட்டியுள்ளது. விலங்குகள் உரிமைக்காக போராடி வருபவர் குரல் கொடுத்து வருபவர் சைரஸ். அவரை விட அருமையான சைவ அழகி வேறு யாரும் இருக்க முடியாது.

மீனுக்காக பாடல்...
தனக்கு மிகவும் பிடித்த புளோபிஷ் மீனுக்காக அவர் பாடலே எழுதியுள்ளார். அந்த அளவுக்கு பிற உயிரினங்களை அவர் நேசிக்கிறார். இந்த நேசிப்புக்காகவே அவருக்கு சிறந்த அழகிப் பட்டம் தர வேண்டும் என்று பேடா கூறியுள்ளது.

காய்கறிகளுக்கு மத்தியில்...
முழுமையான சைவ உணவுப் பிரியை சைரஸ். சமீபத்தில் கூட காய்கறிகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தைப் போட்டு சைவக்காரியாக வாழ்வதில் உள்ள சந்தோஷத்தை வர்ணித்திருந்தார்.

முந்தைய அழகிகள்...
இதற்கு முன்பு எல்லன் பேஜ், ஜேரட் லீட்டோ, ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன், நதாலி போர்ட்மேன், உட்டி ஹார்லசென், ஒலிவியா வைல்ட் ஆகியோருக்கு இந்தப் பட்டம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications