இந்த பக்கி உடம்பு பூரா பச்சையைக் குத்திட்டு படுற பாட்டைப் பாருங்களேன்!
லண்டன்: ரசிப்புக்கும், ரசனைக்கும் வயது ஒரு தடையல்ல என்பார்கள். அது 43 வயதான கார்ல் மெக்காய்ட் என்ற இந்த இங்கிலாந்து நபருக்கும் பொருந்தும். ஆனால் இவரது ரசனை கொஞ்சம் ஓவராகி தற்போது இவருக்கு ஜோடி கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விட்டது.
பாடகி மைலி சிரஸ் என்றார் கார்ல் மெக்காய்டுக்கு உயிர். அப்படி ஒரு ரசிகர். சாதா ரசிகர் இல்லை பாஸ்.. படு தீவிரமான ரசிகர். இதன் காரணமாக சிரஸ் பெயரையும், அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் தனது உடலில் பச்சை குத்தி வைத்துள்ளார் கார்ல். ஒன்று இரண்டு இல்லை, 29 பச்சை குத்தியுள்ளார்.

ஆனால் இன்று இந்த பச்சையெல்லாம் சேர்ந்து இவரது காதல் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்து விட்டது. இவரது தீவிர சிரஸ் வெறியைப் பார்த்து எந்தப் பெண்ணும் இவரை காதலிக்க முன்வருவதில்லையாம். அட, இதெல்லாம் சும்மா ஜாலிக்கும்மா.. உன்னை மட்டும்தான் நெஞ்சில் சுமப்பேன் என்று சத்தியம் பண்ணாத குறையாக கூறிக் கூப்பிட்டும் யாரும் காதலிக்க மாட்டேன் என்று சொல்கிறார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு காதலி கிடைப்பது மிக மிக அரிதாக உள்ளது. அப்படியே காதலிக்க யாராவது கிடைத்தாலும் கூட எனது பச்சைகளைப் பார்த்து விட்டு ஓடிப் போய் விடுகிறார்கள். கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது என்கிறார் சிரித்தபடி.
மனிதரின் உடம்பில் எங்கு பார்த்தாலும் மைலி சிரித்துக் கொண்டிருக்கிறார். கழுத்து, மார்பு, முதுகு, கை, தொடை என எதையும் விடவில்லை கார்ல்.
மைலியின் பெயர், முகம், அவரது பேச்சுக்கள் என விதம் விதமாக டிசைன் டிசைனாக பச்சை குத்தியிருக்கிறார் கார்ல். தற்போது காதலி கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால் ஒவ்வொரு பச்சையாக அழித்து வருகிறாராம். செலவுதான் ஜாஸ்தியாக இருக்கிறதாம்.

இவர் இவ்வளவு சிரமப்பட்டு பச்சை குத்தியுள்ள நிலையில் இதை கேலி செய்து கமெண்ட் அடித்துள்ளார் மைலி என்பது முக்கியமானது. கார்ல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, கருமம் கருமம்... அந்த பச்சையைப் பார்த்தால் எனக்கே அசிங்கமாக, அருவெருப்பாக இருக்கிறது என்று கூறி கார்ல் மெக்காய்டை அதிர வைத்துள்ளார் மைலி.
தேவையா தம்பி இதெல்லாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications