அல் கொய்தாவுக்கு முழுக்கு.. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஓடி வரும் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இதுவரை அல் கொய்தாவில் இருந்து வந்த தீவிரவாதிகள் பலரும், தற்போது ஈராக்கை உலுக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பொலிவிழந்து போன அல் கொய்தாவில் இதுவரை இருந்தவர்களுக்குப் புதிய களம் போல, ஐஎஸ்ஐஎஸ் காணப்படுவதாகவும், எனவே பலரும் அந்த தீவிரவாத அமைப்பில் இணைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே ஒரு குழு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து பல வெற்றிகளை ஈராக்கில் பெற்று வரும் நிலையில், அல் கொய்தாவினர் அதில் இணைந்து மேலும் பல கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

Militants abandoning al-Qaida to join Islamic State: Report

தற்போது அரபு நாடுகளைச் சேர்ந்த சில அல் கொய்தா அமைப்பினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அல் கொய்தாவில் இணையலாம் என்று தெரிகிறது.

ஏமன் நாட்டைச் சேர்ந்த சிலர் இதில் இணைந்துள்ளனராம். அதேபோல லிபியாவைச் சேர்ந்த ஒரு பிரிவும் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ கிலாபத் அமைப்பு அல் கொய்தாவிலிருந்து பிரிந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

உண்மையில் அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்து உருவானதே இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பாகும். தற்போது ஈராக் மற்றும் சிரியாவில் பல கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை இதை கையகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல நகரங்களைக் குறி வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+