அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்: 3 அடி உயரத்திற்கு சாலையில் குவிந்த பனி.. மக்கள் முடக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் வாஷிங்டனில் கடும் பனிப்புயல் வீசுகிறது. 3 அடி உயரத்திற்கு பனி கொட்டித் தீர்ப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலைகளிலும், வீட்டு கூரைகள் மற்றும் மாடிகளிலும் பனி மலை, மலையாக கொட்டிக் கிடக்கின்றது.

அன்றாட வாழ்க்கை பாதிப்பு:
ரோடுகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் வாஷிங்டனில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து:
கடும் பனிப்புயல் வீசுவதால் வாஷிங்டன் உள்பட கிழக்கு கடற்கரை நகரங்களுக்கான விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கிட்டதட்ட 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கார் ஓட்ட வேண்டாம்:
வாஷிங்டனில் மெட்ரோ ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. குடியிருப்பு வாசிகள் மதியம் 1 மணிக்கு மேல் ரோடுகளில் கார் ஓட்டிச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அலை மோதும் கூட்டம்:
அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எனவே அங்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் சேமித்து வைத்துள்ளனர். அதனால் பால், முட்டை, ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க் கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
அபாயத்தில் 6 கோடி பேர்:
அதே போன்று அமெரிக்காவில் டென்னிசே, மசாசூசெட்ஸ் மாகாணங்களும் கடும் பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன், டென்னிசே ஆகிய 3 மாகாணங்களில் கிட்டதட்ட 6 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications